ஐபிஎல்

விஜய் ‘பீஸ்ட்’ போஸ்டரில் பட்லர்

28th May 2022 03:19 PM

ADVERTISEMENT

 

விஜய் இடம்பெற்ற பீஸ்ட் படத்தின் போஸ்டரில் விஜய்க்குப் பதிலாக ஜாஸ் பட்லரின் முகத்தை வைத்து புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம்.

ஐபிஎல் போட்டியின் பிளேஆஃப் சுற்றில் ராஜஸ்தானும் ஆர்சிபியும் நேற்று மோதின. இதில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ராஜஸ்தான் அணி. முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது. ரஜத் படிதார் மீண்டும் சிறப்பாக விளையாடி 42 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் எடுத்தார். பிரசித் கிருஷ்ணா, ஒபட் மெக்காய் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். ராஜஸ்தான் அணி, 18.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. பட்லர், 60 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 106 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்த வருட ஐபிஎல் போட்டியில் இத்துடன் 4 சதங்கள் அடித்துள்ளார் பட்லர். மேலும் இதுவரை விளையாடிய 16 இன்னிங்ஸில் 824 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.

ADVERTISEMENT

பட்லரின் பங்களிப்பைப் பாராட்டும் விதமாக பீஸ்ட் படத்தின் போஸ்டரில் விஜய்க்குப் பதிலாக பட்லரின் முகத்தை வைத்து புதிய போஸ்டரை ட்விட்டரில் வெளியிட்டுள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. மேலும் விஜய்யின் கையில் இருந்த துப்பாக்கிக்குப் பதிலாக பட்லரின் கையில் பேட் இருப்பது போல மாற்றப்பட்டுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாமல் விஜய் ரசிகர்களும் இந்த போஸ்டரைச் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். 

 

Tags : Beast Buttler
ADVERTISEMENT
ADVERTISEMENT