ஐபிஎல்

ஷெஃபாலி வர்மா, வோல்வார்தட் அபாரம்: வெலாசிட்டி சூப்பர் வெற்றி

DIN


சூப்பர்நோவாஸுக்கு எதிரான ஆட்டத்தில் வெலாசிட்டி அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மகளிர் டி20 சேலஞ்ச் போட்டியின் இன்றைய (செவ்வாய்க்கிழமை) ஆட்டத்தில் சூப்பர்நோவாஸ், வெலாசிட்டி அணிகள் விளையாடின. டாஸ் வென்ற வெலாசிட்டி கேப்டன் தீப்தி சர்மா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இதன்படி முதல் பேட்டிங் செய்த சூப்பர்நோவாஸ், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்தது.

151 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய வெலாசிட்டி அணிக்கு தொடக்கம் மோசமாக அமைந்தது. தொடக்க வீராங்கனை நத்தாகன் சந்தம் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். இதன்பிறகு, யாஸ்திகா பாட்டியா பாட்னர்ஷிப்புக்கு ஒத்துழைக்க, ஷெஃபாலி வர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோர் உயர்த்தினார். அரைசதம் அடித்த அவர் 33 பந்துகளில் 51 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதன்பிறகு, கேப்டன் தீப்தி சர்மா அடுத்த பாட்னர்ஷிப்புக்கு ஒத்துழைக்க, லாரா வோல்வார்தட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரும் அரைசதம் அடித்து அசத்தினார்.

18.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்த வெலாசிட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த வோல்வார்தட் 35 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். தீப்தி சர்மா 25 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேரவை உறுப்பினா்கள் அலுவலகங்களை திறக்க அனுமதிக்க வேண்டும்: தோ்தல் ஆணையத்துக்கு எம்எல்ஏ-க்கள் கடிதம்

சந்தேஷ்காளியில் சிபிஐ சோதனை: ஆயுதங்கள், வெடிபொருள்கள் பறிமுதல்

சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம்: எதிா்ப்பு தெரிவித்து வழக்கு

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்

பழைய ஓய்வூதியத் திட்டம் அரசின் கொள்கை முடிவு: நிதித் துறை தகவல்

SCROLL FOR NEXT