ஐபிஎல்

மும்பை இந்தியன்ஸ் வெற்றியை கொண்டாடிய ஆர்சிபி வீரர்கள்

22nd May 2022 05:14 PM

ADVERTISEMENT

 

நேற்றய (மே-21) ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் தில்லி கேப்பிடல்ஸை வென்றதை கொண்டாடிய ஆர்சிபி அணி வீரர்கள். 

நேற்றைய (மே-21) போட்டி ஆர்சிபி ( ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு) க்கு முக்கியமானது. என்னெனில் தில்லி அணியை மும்பை தோற்கடித்தால் ஆர்சிபிக்கு ப்ளே ஆப் தகுதிபெறும். ஆர்சிபி எதிர்பார்த்த படியே மும்பை வென்றது. 

இதனை ஆர்சிபி அணியினர் கொண்டாடித் தீர்த்தனர். ரசிகர்களும் இணையத்தில் கொண்டாடித் தீர்த்தனர். 

ADVERTISEMENT

இதுக்குறித்து கூறிய விராட் கோலி : நேற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் தில்லி கேப்பிடல்ஸை வென்றதை கொண்டாடிய ஆர்சிபி அணி வீரர்கள். 
இது நம்ப முடியவில்லை. ட்ரெஸ்ஸிங் ரூமில் எங்களது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மும்பைக்கு நன்றி. இதை நாங்கள் எப்போதும் நியாபகம் வைத்திருப்போம்.

இந்த வெற்றியை குறித்து மேக்ஸ்வெல்  கூறியதவாது : இந்த இரவில் கிடைத்த வெற்றி எங்களுக்கு முக்கியமானது. இன்னும் எங்களால் ஒரு படி முன்னேற முடியும். எங்களது வெற்றிக்கு இன்னொரு அணியை எதிர்ப்பர்த்து இருந்தோம் ஆனால் இனிமேல் இது எங்களுடையது. 

ஆர்சிபி கேப்டன் கூறியதவாவது: எல்லோருமாக உட்கார்ந்து இந்த போட்டியை பார்த்த்து மகிழ்ச்சியாக இருந்தது. மும்பை எடுத்த ஒவ்வொரு விக்கெட்டுக்கும், அவர்கள் அடித்த ஒவ்வொரு ரன்களுக்கும் நாங்கள் கைத்தட்டி மகிழ்ந்தோம். எல்லோருமாக ஒன்றாகப் பார்த்து இறுதியில் கொண்டாடியது சந்தோசமாக இருந்தது. மீண்டும் நாங்கள் பயிற்சிக்கு திரும்ப இருக்கிறோம். 

ADVERTISEMENT
ADVERTISEMENT