ஐபிஎல்

ஐபிஎல்: முதல் அரை சதத்துக்காக நீண்ட நாள் காத்திருந்த வீரர் யார்?

12th May 2022 08:39 AM

ADVERTISEMENT

 

ஐபிஎல் போட்டியில் 70 இன்னிங்ஸுக்குப் பிறகு தனது முதல் அரை சதத்தை எடுத்துள்ளார் ஆர். அஸ்வின்.

நவி மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது தில்லி அணி. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது. அஸ்வின் 38 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் அரை சதமெடுத்தார். இதன்பிறகு விளையாடிய தில்லி அணி, 18.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மிட்செல் மார்ஷ் 89, வார்னர் ஆட்டமிழக்காமல் 52 ரன்கள் எடுத்தார்கள்.

ஐபிஎல் போட்டியில் 70 இன்னிங்ஸுக்குப் பிறகு தனது முதல் அரை சதத்தை எடுத்துள்ளார் ராஜஸ்தான் அணி வீரர் ஆர். அஸ்வின். 3-ம் நிலை வீரராகக் களமிறங்கியதால் அவரால் நேற்று அரை சதமெடுக்க முடிந்தது. ஐபிஎல் போட்டியில் முதல் அரை சதத்தை எடுக்க அதிக இன்னிங்ஸ் தேவைப்பட்ட வீரர்களின் அஸ்வினுக்கு 2-ம் இடம். இதற்கு முன்பு ஜடேஜா, 131 இன்னிங்ஸுக்குப் பிறகு தனது முதல் அரை சதத்தை எடுத்தார். 

ADVERTISEMENT

ஐபிஎல்: முதல் அரை சதமெடுக்க அதிக இன்னிங்ஸ் தேவைப்பட்ட வீரர்கள்

131 - ஜடேஜா
70 - அஸ்வின்

Tags : IPL
ADVERTISEMENT
ADVERTISEMENT