ஐபிஎல்

ஹீரோ ஜடேஜா: கடைசி பந்தில் சென்னை 'த்ரில்' வெற்றி

DIN


கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது.

ஐபிஎல்-இன் இன்றைய முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த கொல்கத்தா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது.

172 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் வெற்றிக் கூட்டணி ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் பாப் டு பிளெஸ்ஸி களமிறங்கினர். வழக்கம்போல் இம்முறையும் இருவரும் சிறப்பான தொடக்கத்தையே தந்தனர். சரியான பந்துகளைத் தேர்வு செய்து பவுண்டரிகள் அடித்து பந்துவீச்சாளர்களுக்குத் தொடர்ச்சியாக அழுத்தம் தந்துகொண்டே இருந்தனர். இதனால், பவர் பிளே வரை சென்னை அணி விக்கெட் விழாமல் 52 ரன்கள் சேர்த்தது.

9-வது ஓவரில் ஆண்ட்ரே ரஸலை அறிமுகப்படுத்த, முதல் பந்திலேயே சிக்ஸருடன் வரவேற்றார் ருதுராஜ். ஆனால், அடுத்த பந்திலேயே ருதுராஜை 40 ரன்களுக்கு வீழ்த்தி வழியனுப்பி வைத்தார் ரஸல்.

அடுத்து களமிறங்கிய மொயீன் அலியை ஷார்ட் பிட்ச் பந்துகள் மூலம் அச்சுறுத்தினார் லாக்கி பெர்குசன். ஆனால், அதே ஓவரின் கடைசி 2 பந்துகளை பவுண்டரிக்கும், அற்புதமான சிக்ஸருக்கும் பறக்கவிட்டு நெருக்கடியை கொல்கத்தா பக்கமே திருப்பினார் மொயீன் அலி. 

இதன்பிறகு, அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட டு பிளெஸ்ஸி 44 ரன்களுக்கு பிரசித் கிருஷ்ணா பந்தில் ஆட்டமிழந்தார். டு பிளெஸ்ஸி விக்கெட்டுக்குப் பிறகு ரன் ரேட்டில் சற்று சரிவு ஏற்பட்டது.

சுனில் நரைனின் 15-வது ஓவர் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி இரண்டாவது பந்தை சிக்ஸருக்குப் பறக்கவிட முயற்சித்து போல்டானார் அம்பதி ராயுடு.

16-வது மற்றும் 17-வது ஓவரில் 14 ரன்கள் மட்டுமே எடுத்து, மொயீன் அலி (32 ரன்கள்) விக்கெட்டையும் இழந்ததால், சென்னை வெற்றிக்கு கடைசி 3 ஓவரில் 31 ரன்கள் தேவைப்பட்டன. களத்தில் சுரேஷ் ரெய்னா மற்றும் மகேந்திர சிங் தோனி இருந்தனர்.

வருண் சக்ரவர்த்தி திருப்புமுனை:

வருண் சக்ரவர்த்தி வீசிய 18-வது ஓவரின் முதல் பந்தில் இரண்டாவது ரன் எடுக்க முயற்சித்து ரெய்னாவும் ஆட்டமிழக்க ஆட்டத்தில் விறுவிறுப்பு அதிகரித்தது. அதே ஓவரில் கேப்டன் தோனியும் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்ததால், ஆட்டம் மேலும் விறுவிறுப்பானது.

அந்த ஓவரில் 5 ரன்கள் மட்டுமே கிடைத்ததால், சென்னை வெற்றிக்கு கடைசி 2 ஓவர்களில் 26 ரன்கள் தேவைப்பட்டன.

ஜடேஜா ஹீரோ:

பிரசித் கிருஷ்ணா 19-வது ஓவரை வீச முதல் இரண்டு பந்துகளில் ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரனால் தலா 1 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. ஆனால், அடுத்த 4 பந்துகளில் முறையே இரண்டு சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் விளாசி ஆட்டத்தை முற்றிலும் சென்னை பக்கம் திருப்பினார்.

இதனால், சென்னை வெற்றிக்குக் கடைசி ஓவரில் 4 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டன.

நரைன் சுழல்:

கடைசி ஓவரை சுனில் நரைன் வீசினார். முதல் பந்திலேயே சாம் கரன் ஆட்டமிழக்க மீண்டும் பதற்றம் அதிகரித்தது. அடுத்த பந்தில் ஷர்துல் தாக்குர் ரன் எடுக்காததால் 4 பந்துகளில் 4 ரன்கள் தேவைப்பட்டன. ஆனால், அடுத்த பந்தில் சாமர்த்தியமான ஷாட்டால் சென்னைக்கு 3 ரன்கள் கிடைத்தன. 

3 பந்துகளில் 1 ரன்கள் தேவை. ஜடேஜா களத்தில் இருந்தார். 4-வது பந்தில் ரன் இல்லை. 5-வது பந்தில் ஜடேஜாவுக்கு எல்பிடபிள்யு கொடுத்தார் நடுவர். ஜடேஜா ரிவியு எடுக்க மூன்றாவது நடுவரால் விக்கெட் என்பது உறுதி செய்யப்பட்டது. ஜடேஜா 8 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார்.

இதனால், கடைசி பந்தில் சென்னை வெற்றிக்கு 1 ரன் தேவைப்பட்டது. தீபக் சஹார் தூக்கி அடித்து 1 ரன் எடுக்க சென்னை அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

SCROLL FOR NEXT