ஐபிஎல்

விராத் கோலி, படிக்கல் அதிரடி: சென்னைக்கு 157 ரன்கள் இலக்கு

24th Sep 2021 09:31 PM

ADVERTISEMENT

சென்னை சூப்பர் கிங்ஸ் எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 156 ரன்கள் எடுத்துள்ளது. 

14-வது ஐபிஎல் சீசனின் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

சென்னை அணியை பொறுத்தவரையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் களமிறங்கிய அதே வீரர்களே இந்த ஆட்டத்திலும் களமிறக்கப்பட்டுள்ளனர். 

இதையடுத்து பெங்களூரு அணியின் துவக்க வீரர்களாக விராத் கோலி மற்றும் படிக்கல் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். விராத் கோலி 53 ரன்களுக்கும், படிக்ககல் 70 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த வீரர்களில் டிவில்லியர்ஸ் 12, மேக்ஸ்வெல் 11 ரன்கள் என அடுத்தடுத்து வெளியேறினர். 

ADVERTISEMENT

இதையும் படிக்க- மணிப்பூர் பழங்குடி தலைவர் கொலை: 16 பேர் பணியிடை நீக்கம்

இதனால் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 157 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னை அணியில் அதிகபட்சமாக பிராவோ 3, ஷர்துல் 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

Tags : Chennai Super Kings ipl cricket
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT