ஐபிஎல்

ராஜஸ்தான் ராயல்ஸ் வீரரின் தந்தை காலமானார்

9th May 2021 08:21 PM

ADVERTISEMENT


ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த சேத்தன் சகாரியாவின் தந்தை காஞ்சிபாய் சகாரியா கரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்தார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் சுட்டுரைப் பக்கத்தில் இதனை உறுதி செய்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் தற்கொலை செய்துகொண்ட சகோதரரை இழந்த சகாரியா தற்போது தந்தையையும் இழந்துள்ளார்.

இந்தக் கடினமான தருணத்தில் சகாரியாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

கடந்த ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக இருந்த சகாரியா கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஏலத்தில் ரூ. 1.2 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்டார்.

Tags : Sakariya
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT