ஐபிஎல்

விஜய் சங்கரை அப்துல் சமதுக்கு முன்பாக களமிறக்கியது ஏன்?: சன்ரைசர்ஸ் அணி பயிற்சியாளர் பதில்

DIN

அப்துல் சமத்துக்கு முன்பாக விஜய் சங்கரைக் களமிறக்கியதற்கு சன்ரைசர்ஸ் அணி பயிற்சியாளர் விளக்கம் அளித்துள்ளார்.

ஐபிஎல் போட்டியின் 3-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது.

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கொல்கத்தா 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் அடித்தது. 9 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 80 ரன்கள் எடுத்தார் நிதிஷ் ராணா. அடுத்து ஆடிய ஹைதராபாத் 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 177 ரன்களே எடுத்தது. மணிஷ் பாண்டே இறுதிவரை ஆட்டமிழக்காமல் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 61 ரன்கள் சோ்த்துப் போராடினாா். 

ஜம்மு காஷ்மிர் பகுதியைச் சேர்ந்த 19 வயது வீரர் அப்துல் சமத், அதிரடி ஆட்டத்துக்குப் பெயர் பெற்றவர். சன்ரைசர்ஸ் அணி இலக்கை விரட்டியபோது, 16-வது ஓவரின் முடிவில் அந்த அணி வெற்றி பெற 24 பந்துகளில் 57 ரன்கள் தேவைப்பட்டபோது அப்து சமத்துக்கு முன்பாக விஜய் சங்கர் களமிறங்கினார். 7 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து அவர் ஆட்டமிழந்தார். பிறகு களமிறங்கிய அப்துல் சமத், முதல் பந்திலேயே கம்மின்ஸ் வீசிய பந்தை சிக்ஸருக்கு அனுப்பினார். அதே ஓவரில் மற்றொரு சிக்ஸரும் அடித்தார். எனினும் கடைசி ஓவரில் 22 ரன்கள் தேவைப்பட்டபோது சன்ரைசர்ஸ் அணியால் 11 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

அப்துல் சமத்துக்கு முன்பாக விஜய் சங்கரைக் களமிறக்கியது தொடர்பாக சன்ரைசர்ஸ் அணி விமர்சங்களை எதிர்கொண்டுள்ளது. இதற்கு அந்த அணியின் பயிற்சியாளர் டிரெவர் பேலிஸ் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:

சில நாள்களுக்கு முன்பு நாங்கள் விளையாடிய பயிற்சி ஆட்டத்தில் விஜய் சங்கர் தான் எங்களுடைய சிறந்த பேட்ஸ்மேனாக விளங்கினார். ஓர் ஆட்டத்தில் 95 ரன்கள் எடுத்தார். பல பந்துகளில் சிக்ஸர்கள் அடித்தார். இலக்கை விரட்டும் சூழலில் சிலசமயம் முதல் பந்திலிருந்தே அதிரடியாக விளையாட வேண்டிய நிலைமை ஏற்படும். அதிரடியாக விளையாட முடியும் என்பதை அப்துல் சமத் குறுகிய காலக்கட்டத்தில் நிரூபித்துள்ளார். அவருக்கு மேலும் பல அனுபவங்கள் கிடைக்கும்போது மேலும் பல வாய்ப்புகளைப் பெறுவார் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

SCROLL FOR NEXT