ஐபிஎல்

லண்டனில் ஐபிஎல்: மேயர் விருப்பம்

DIN

ஐபிஎல் போட்டியை லண்டனில் நடத்த வேண்டும் என லண்டன் மேயர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

கரோனா சூழல் காரணமாக கடந்த வருட ஐபிஎல் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்த வருடப் போட்டி இந்தியாவிலேயே நடத்தப்படுகிறது. சென்னை, மும்பை, கொல்கத்தா, ஆமதாபாத், தில்லி, பெங்களூர் ஆகிய ஆறு நகரங்களில் ஐபிஎல் போட்டி நடைபெறவுள்ளது. கரோனா தொற்று அச்சம் காரணமாக, தொடக்க நிலை ஆட்டங்களில் ரசிகா்களுக்கு அனுமதி கிடையாது. 

ஐபிஎல் 2021 போட்டி நேற்று முதல் சென்னையில் தொடங்கியது. முதல் ஆட்டத்தில் மும்பையை வீழ்த்தியது பெங்களூர் அணி. இன்று மும்பையில் சென்னையும் தில்லியும் மோதுகின்றன. 

இந்நிலையில் ஐபிஎல் போட்டியை லண்டனில் நடத்த வேண்டும் என லண்டன் மேயர் சாதிக் கான் விருப்பம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் ஒரு பேட்டியில் கூறியதாவது:

ஐபிஎல் போட்டியை லண்டனில் நடத்த ஆர்வமாக உள்ளேன். இதன்மூலம் உலகின் விளையாட்டுத் தலைநகரமாக லண்டன் விளங்கும். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் மட்டுமல்ல ஐபிஎல் போட்டியில் விளையாடும் கோலியையும் லண்டனில் காண விரும்புகிறேன். பெங்களூர் அணி கேப்டனாக கோலியையும் சென்னை கேப்டனாக தோனியையும் மும்பை கேப்டனாக ரோஹித் சர்மாவையும் இங்கு காண ஆர்வமாக உள்ளேன். 

ஐபிஎல் நிர்வாகத்திடமும் ஐபிஎல் அணிகளிடமும் இதுகுறித்துப் பேசி வருகிறோம். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மற்றும் மற்றவர்களிடமும் பேசி இந்தக் கனவை நிறைவேற்ற விரும்புகிறேன். இதனால் லண்டனுக்கு மட்டுமல்ல இங்கிலாந்தின் இதர கிரிக்கெட் மைதானங்களுக்கும் பயனுள்ளதாக அமையும். ஐபிஎல் போட்டியை லண்டனில் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளார்கள். இந்தியாவுக்கு லண்டனையும் லண்டனுக்கு இந்தியாவையும் மிகவும் பிடிக்கும். இதனால் இரு தரப்புக்கும் பலன் கிடைக்கும் என்று கூறியுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT