கிரிக்கெட் உலகக் கோப்பை-2019

ஒரு உலகக் கோப்பைப் போட்டியில் அதிக ரன்கள்: முறியடிக்க முடியாத  சச்சினின் சாதனை!

15th Jul 2019 11:18 AM | எழில்

ADVERTISEMENT

 

பரபரப்பாக நடைபெற்ற 2019 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி முதன்முறையாக உலகக் கோப்பையை வென்று இங்கிலாந்து சாதனை படைத்தது.

இந்நிலையில் ஒரு உலகக் கோப்பைப் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த சச்சினின் சாதனை இந்த உலகக் கோப்பைப் போட்டியிலும் முறியடிக்கப்படவில்லை.

உலகக் கோப்பைப் போட்டியில் அதிக ரன்கள் பெற்ற சாதனை சச்சின் வசம் உள்ளது. 2003 உலகக் கோப்பையில் 673 ரன்களை அவர் சேர்த்திருந்தார். 

ADVERTISEMENT

2019 உலகக் கோப்பை லீக் சுற்றின் முடிவில், ரோஹித் சர்மா 647  ரன்களும் வார்னர் 638 ரன்களும் எடுத்திருந்தார்கள். இதனால் அரையிறுதியில் இவ்விருவரும் சச்சின் சாதனையைச் சுலபமாக முறியடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 32 வயது ரோஹித் அரையிறுதியில் 1 ரன்னும் அதே வயது கொண்ட வார்னர் 9 ரன்கள் மட்டும் எடுத்து ஏமாற்றினார்கள். மேலும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதியில் தோற்றதால் சச்சினின் சாதனையை இவ்விருவராலும் தகர்க்க முடியாமல் போனது.

இறுதிப்போட்டியிலும் இரு வீரர்களுக்கு சச்சினின் சாதனையைத் தாண்ட வாய்ப்பு இருந்தது. ரூட் 123 ரன்களும் வில்லியம்சன் 124 ரன்களும் எடுத்தால் சச்சினைப் பின்னுக்குத் தள்ளிவிடலாம் என்கிற நிலைமை இருந்தது. ஆனால் ரூட் 7 ரன்களிலும், வில்லியம்சன் 30 ரன்களிலும் ஆட்டம் இழந்தார்கள். இதனால் 2003 உலகக் கோப்பையில் சச்சின் நிகழ்த்திய சாதனை தொடர்ந்து நீடிக்கிறது.

ஒரு உலகக் கோப்பைப் போட்டியில் அதிக ரன்கள்

673 ரன்கள் - சச்சின் (2003)
659 ரன்கள் - ஹேடன் (659)
648 ரன்கள் - ரோஹித் சர்மா (2019)
647 ரன்கள் - டேவிட் வார்னர் (2019)
606 ரன்கள் - ஷகிப் அல் ஹசன் (2019)

ADVERTISEMENT
ADVERTISEMENT