விளையாட்டு

தயவு செய்து இதையும் வாங்குங்க: எலான் மஸ்க்கிற்கு கோரிக்கை விடுத்த கிரிக்கெட் வீரர் கில்

30th Apr 2022 01:08 PM

ADVERTISEMENT

குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் சுப்மன் கில் நேற்று இரவு பதிவு செய்த ஒற்றை ட்வீட் சில மணி நேரங்களிலேயே வைரலானது. உலக பணக்காரர்களில் முதன்மை இடத்தில் உள்ள டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான மஸ்க்கை டேக் செய்து, ஸ்விகி நிறுவனத்தை வாங்கும்படி அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

"எலான் மஸ்க், தயவு செய்து ஸ்விகி நிறுவனத்தை வாங்குகள். அப்போதுதான், அவர்கள் உணவை சரியான நேரத்தில் விநியோகிப்பார்கள்" என கில் பதிவிட்டிருந்தார். இதற்கு ஸ்விகி வாடிக்கையாளர் சேவை மையத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம், உடனடியாக பதிலளித்துள்ளது.

அதில், ஆர்டர் செய்த உணவு ஆர்டரின் விவரங்களை நேரடி மெசேஜாக அனுப்ப ஸ்விகி கேட்டு கொண்டது. மெசேஜ் அனுப்பியவுடன் அதற்கு நன்றி தெரிவித்து ஸ்விகி கில்லுக்கு ட்வீட் செய்தது. எலான் மஸ்க்கை டேக் செய்து கில் போட்ட ட்வீட்டுக்கு 31 ஆயிரம் லைக்குகளும் 1,600 ரீட்வீட்களும் கிடைத்தன.

இதையும் படிக்கவாழ்த்து மழையில் ரோஹித் சர்மா: விருப்பங்கள் சாத்தியமாகட்டும்!...

ADVERTISEMENT

கில்லின் ட்வீட்டுக்கு ட்விட்டர் பயனாளிகள் பலரும் பதில் அளித்துள்ளனர். அதில், ஒன்று அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது. போலியான ஸ்விகி கணக்கு ஒன்றிலிருந்து பதிவு செய்த ட்வீட்டில், "நீங்கள் டி20 கிரிக்கெட்டில் ஆடுவதை விட நாங்கள் வேகமாக தான் இருக்கிறோம்" என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

நடப்பு ஐபிஎல் தொடரில் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ள குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக கில் விளையாடி வருகிறார். முதல் மூன்று போட்டிகளில் சிறப்பாக விளையாடி 180 ரன்கள் எடுத்த கில், பின்னர் மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வந்துள்ளார். கடைசி ஐந்து போட்டிகளில், அவர் 49 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT