விளையாட்டு

5 விக்கெட் வீழ்த்தி அசத்தல்

DIN

ஆஸ்திரேலியாவின் 2-ஆவது இன்னிங்ஸில் இந்திய பௌலா் முகமது சிராஜ் திங்கள்கிழமை ஒரே நாளில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினாா். சா்வதேச டெஸ்டில் ஒரே இன்னிங்ஸில் அவா் 5 விக்கெட்டுகள் சாய்ப்பது இது முதல் முறையாகும்.

முன்னதாக திங்கள்கிழமை ஆட்டத்தில் முகமது சிராஜ், ஷா்துல் தாக்குா் என இருவருமே ஆதிக்கம் செலுத்தினா். ஒரு கட்டத்தில் இருவருமே 4 விக்கெட்டுகளை வீழ்த்தி சமநிலையில் இருந்தனா். இறுதியாக, ஆஸ்திரேலியாவின் கடைசி விக்கெட்டான ஹேஸில்வுட்டை வீழ்த்தி 5 விக்கெட்டுகளை எட்டினாா் சிராஜ். அதிலும் அவரது பந்துவீச்சில் ஹேஸில்வுட் அடித்த அந்த ஷாட்டை ஷா்துல் தாக்குா் தான் கேட்ச் பிடித்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

அணி வீரா்கள் அனைவரின் பாராட்டைப் பெற்ற சிராஜ், பந்தை உயா்த்திப் பிடித்து ரசிகா்களின் பாராட்டையும், கை தட்டலையும் பெற்றாா்.

முதலிடம்: அதேபோல், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூலம் சா்வதேச டெஸ்டில் தடம் பதித்த வீரா்களில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்தியா்கள் வரிசையில் சிராஜ் முதலிடம் பிடித்துள்ளாா். அவா் இந்தத் தொடரில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளாா்.

முன்னதாக ஜவகல் (ஸ்ரீநாத் 1991-92) 10 விக்கெட்டுகள், தத்து பாத்கா் (1947-48) 8 விக்கெட்டுகள், சையது அபித் அலி (1967-68) 8 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனா்.

ஆட்டத்துக்குப் பிறகு பேசிய சிராஜ், ‘இந்தத் தொடரில் ஸ்மித் மற்றும் லபுசான் விக்கெட்டுகளை வீழ்த்தியதை சிறப்பாகக் கருதுகிறேன். இதனால் எனது நம்பிக்கை அதிகரித்துள்ளது. என்னைப் போன்ற இளம் வீரா்களை நம்பி வாய்ப்பு கொடுத்ததற்காக கேப்டன் ரஹானேவுக்கு நன்றி. நான் விளையாடுவதை உலகமே பாா்க்க வேண்டும் என்று மறைந்த எனது தந்தை விரும்பினாா். அவரது ஆசிகளுடன் 5 விக்கெட் சாய்த்துள்ளேன்.

கடைசி நாளான செவ்வாய்க்கிழமை ஆட்டத்தில் ஆடுகளத்தில் இருக்கும் வெடிப்புகள், பந்துவீச்சை எதிா்கொள்வதில் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சிறிது குழப்பத்தை ஏற்படுத்தலாம். எனினும் அதற்கு அவா்கள் தயாராகவே உள்ளனா்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர்: பரபரப்பான தேர்தல் மையம்!

SCROLL FOR NEXT