விளையாட்டு

சார்லஸ்டன் ஓபன்: காலிறுதியில் ஆஷ்லி பர்ட்டி

DIN


மியாமி: அமெரிக்காவில் நடைபெறும் சார்லஸ்டன் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பர்ட்டி காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 

முன்னதாக கடந்த வாரத்தில் மியாமி ஓபன் சாம்பியனாகிய அவர், அதைத் தொடர்ந்து இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ளார். போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் பர்ட்டி காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 7-6 (7/3), 4-6, 6-4 என்ற செட்களில் அமெரிக்காவின் ஷெல்பி ரோஜர்ஸை வீழ்த்தினார். 

காலிறுதியில் பர்ட்டி, ஸ்பெயின் வீராங்கனை பெüலா பதோசாவை எதிர்கொள்கிறார். பதோசா முந்தைய சுற்றில் மற்றொரு அமெரிக்க வீராங்கனையான கேட்டி மெக்னாலியை 6-3, 6-3 என்ற செட்களில் வீழ்த்தியிருந்தார். 

போட்டித்தரவரிசையில் 15-ஆவது இடத்திலிருக்கும் ரஷிய வீராங்கனை வெரோனிகா குதர்மெடோவா 6-0, 6-3 என்ற செட்களில் ஜப்பானின் குருமி நாராவை தோற்கடித்து காலிறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளார். அதில் அவர் அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸை சந்திக்கிறார். ஸ்டீபன்ஸ் 6-3, 6-4 என்ற செட்களில் ஆஸ்திரேலியாவின் அஜ்லா டாம்லஜானோவிச்சை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். 

போட்டித்தரவரிசையில் 11-ஆவது இடத்தில் உள்ள கஜகஸ்தானின் யூலியா புடின்சேவாவை எதிர்கொண்ட ஸ்பெயினின் கார்பின் முகுருஸா, ஆட்டத்தின்போது பாதியிலேயே விலகியதால் யூலியா காலிறுதிக்கு முன்னேறினார். மான்டினீக்ரோ வீராங்கனை டன்கா கோவினிச் 6-4, 6-1 என்ற செட்களில் போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருந்த செக் குடியரசின் பெட்ரா குவிட்டோவாவை வீழ்த்தினார். காலிறுதி ஒன்றில் யூலியா -டன்கா சந்திக்கின்றனர். 

டுனீசியாவின் ஆன்ஸ் ஜாபுயெர் -பிரான்ஸின் ஆலிஸ் கார்னெட்டையும், அமெரிக்காவின் கோகோ கெüஃப் -சக நாட்டவரான லெüரன் டேவிசையும் தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் பட்டமேற்பு விழா: மடாதிபதிகள், ஆதீனங்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT