நூல் அரங்கம்

அன்பின் முகங்கள்

DIN

அன்பின் முகங்கள் - எம்.டி.வாசுதேவன் நாயர் (தமிழில் - குறிஞ்சிவேலன்);  பக்.240; ரூ.250; கண்மணி கிரியேட்டிவ் வேவ்ஸ், சென்னை-17; ✆ 97910 71218.

மலையாள இலக்கிய உலக ஆளுமை யான  நூலாசிரியர்,  சாகித்திய அகாதெமி, ஞானபீடம் விருதுகளைப் பெற்றவர். இவரது தேர்ந்தெடுத்த  12 சிறுகதைகளின் தொகுப்பே இந்த நூல். 
மூலக்கதையை அச்சுப்பிசகாமல் மொழியாக்கம் செய்யும் திறன் படைத்த குறிஞ்சிவேலனின் எழுத்துகள்.  

9 ஆண்டுகளுக்குப் பின்னர்  தனது மனைவியின் சிகிச்சைக்காக, பூர்விகச் சொத்து  தொடர்பாக அண்ணனைக் காண செல்லும் தம்பியின் உணர்வுகளும் உரையாடல்களும் கொண்ட சிறுகதையின் பெயர்தான் 'அன்பின் முகங்கள்'.   சிறுவயது சகோதர மோதல், அத்தை மகளை மணமுடிப்பது.. என்று ஒவ்வொரு வீட்டிலும் நடக்கும் சம்பவங்களும் படிக்கும்போதே நெஞ்சில் 
நிழலாடுகிறது. 

தந்தையின் பாசத்தை வெளிப்படுத்தும் 'முகத்திரை',    தனிமையில் உறவுகளை நினைத்து யோசிக்கும் 'அந்தி வெளிச்சம்',   25 ஆண்டுகளுக்குப் பின்னர் தனிமையில் வசிக்கும் தந்தையைத் தேடி செல்லும் ராகவனின் உணர்வுகளை வெளிப்படுத்தும் 'சருகுகள் மூடிய',  இலங்கைக்குச் செல்லும் பயணியின் நினைவுகளை வெளிப்படுத்தும் 'கடுகண்ணாவா; ஒரு பயணக்குறிப்பு',  தாயும் பாட்டியும் இல்லாமல் பிறந்த நாள் கொண்டாடும் இளைஞரின் பாச நினைவுகளை வெளிக்கொணரும் 'ஒரு பிறந்தநாள் நினைவு',  பண்டிகை கொண்டாடத்துக்காக ஏங்கும் சிறுவனின் உணர்வுகளை வெளிப்படுத்தும் 'பட்டாசு'  ... என்று ஒவ்வொரு கதையும் ஒவ்வோர் விஷயங்களை வெளிப்படுத்துகிறது.

கதைகளைப் படிக்கும்போது, நம் உறவுகளில் நடைபெற்ற நிகழ்வுகள் கண்களில் நிழலாடுகின்றன.  நூலாசிரியரின் பிற நூல்களைப் படிக்கும் ஆவலை இந்த நூல் தூண்டிவிடுகிறது. சிறுகதை பிரியர்களுக்கு சந்தோஷமான அனுபவம்தான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT