நூல் அரங்கம்

இந்திய நாகரிகம்

DIN

இந்திய நாகரிகம் - நமித் அரோரா (தமிழில் - வ. ரங்காசாரி); பக். 464; ரூ. 500; கிழக்கு பதிப்பகம், சென்னை - 600014; 044 - 42009603. 

இணையத் துறையில் பணியாற்றிய நமித் அரோராவின் "இன்டியன்ஸ்: ஏ பிரீஃப் ஹிஸ்டரி ஆஃப் ஏ சிவிலைசேஷன்'  ஆங்கில நூலின் மொழிபெயர்ப்பு 'இந்திய நாகரிகம்'.

வரலாற்றைத் தேடி, இரு ஆண்டுகள் விடுப்பில் இருபது நாடுகளில் 110 இடங்களைச் சென்று பார்த்த அரோரா, இந்தியாவைப் பற்றி நூலாக எழுத முடிவு செய்தபோது, முக்கியமான  ஆறு இடங்களைத் தெரிவு செய்து, மீண்டும் சென்றுபார்த்து எழுதியுள்ளார்.  தவிர, பழங்கால இந்தியா பற்றிப் பயணக் குறிப்புகளை எழுதியுள்ள புகழ்பெற்ற ஐந்து பயணிகள், அவர்
களின் பதிவுகள் பற்றியும் விவரித்துள்ளார்.

ஒவ்வோரிடத்தையும் வாசகரும் நேரில் பார்ப்பதைப் போலவே விவரிப்பதுடன், இவற்றைப் பற்றி இதுவரை என்னவெல்லாம் சொல்லப்பட்டிருக்கின்றன, எது சரியாக, எது தவறாக இருக்கலாம் என்பதுடன் தன்னுடைய பார்வையையும் பதிவு செய்திருக்கிறார். 

உலகின் முதல் பல்கலை. எனப்படும் பெளத்தர்களின் மடாலயமான நாளந்தா மஹாவிஹாரை பற்றி எழுதும்போது, பிஹாரின் சிறப்புகளையெல்லாம் - புத்தர், மஹாவீரர், அசோகர், சீதை எல்லாம் பிறந்ததைக்  கூறி இன்றைய நிலையுடன் ஒப்பிட்டு வருந்துகிறார்.

தோலாவிரா நகரை வைத்து ஹரப்பா நாகரிகத்தை அலசி ஆராயும் அரோரா, மெகஸ்தனிஸ் குறிப்பில் இசை கேட்டு அமைதியுறும் யானைகளைப் பற்றியும் யுவான் சுவாங் குறிப்பில் ஒரு பெளத்த நகராகவே அயோத்தி இருந்ததையும் குறிப்பிடுகிறார்.

நாகார்ஜுனகொண்டாவும் விஜயபுரியும், கஜுராஹோ, ஹம்பி என ஒவ்வொன்றைப் பற்றியும் விரிவும் ஆழமுமாக இருக்கிறது ஆசிரியரின் எழுத்து. வாராணசியும் நம்பிக்கைகளும் பற்றிய கட்டுரை தனியொரு நூலுக்குரிய தகவல்களைக் கொண்டவை.

வரலாற்றை, வரலாற்றிடங்களை இன்று எழுதும்போது எப்படி எழுத வேண்டும்  என்பதற்கொரு நல்ல எடுத்துக்காட்டு இந்த நூல். தமிழில் எழுதப்பட்டதைப் போலவே வ. ரங்காசாரியின் நல்ல மொழிபெயர்ப்பும்கூட!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் ஊழலில் உருவான குற்றத்தின் வருவாயின் பெரும் பயனாளி ஆத் ஆத்மி கட்சிதான் -அமலாக்கத் துறை பதில்

ஏப். 28, 29 ஆம் தேதிகளில் கா்நாடகத்தில் பிரதமா் மோடி பிரசாரம்

கொலை செய்யப்பட்ட நேஹாவின் பெற்றோரிடம் முதல்வா் ஆறுதல்

கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று முதல்கட்டத் தோ்தல்: 247 வேட்பாளா்கள் போட்டி

அதிமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT