நூல் அரங்கம்

இவர்தான் லெனின்

DIN

இவர்தான் லெனின் (கட்டுரைகள், கதைகள், குறிப்புகள்) - பூ.சோமசுந்தரம்; பக்.264; ரூ.220; ஜீவா பதிப்பகம், அறை எண்.31, மனோகர் மேன்சன், 12/28, செளந்தரராஜன் தெரு, தியாகராய நகர், சென்னை-17.
 ரஷ்ய பொதுவுடைமை இயக்கத்துக்கும், ரஷ்யப் புரட்சிக்கும் தலைமை தாங்கிய பெருமைக்குரியவர் வி.இ.லெனின். அவருடன் பழகியவர்கள் லெனினுடனான தமது அனுபவங்களை கட்டுரைகளாக, கதைகளாக, வாழ்க்கைக் குறிப்புகளாக எழுதி இருக்கிறார்கள். அவற்றின் தொகுப்பாக இந்நூல் மலர்ந்திருக்கிறது.
 லெனின் மிகப் பெரிய தலைவராக இருந்தபோதிலும், ரஷ்யாவில் வாழும் மிகச் சாதாரணமான ஏழை மக்களின் வாழ்க்கை குறித்து மிக அதிகமான கவனம் கொண்டிருந்தது; ஏழை மக்களுடன் நெருங்கிப் பழகியது; அவர்களின் நலன் என்கிற நோக்கில் மட்டுமே சிந்தித்தது இந்நூலில் பல இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 மாபெரும் ரஷ்யப் புரட்சியைத் தலைமை தாங்கி நடத்திய லெனின், சக தோழர்களுடன் கொண்டிருந்த உறவு, அவர்களுடனான கருத்து முரண்பாடுகளைக் கையாண்டவிதம் ஆகியவற்றையும் தெரிந்து கொள்ள முடிகிறது.
 புரட்சிகரமான அமைப்பைக் கட்டி எழுப்புவதில் உள்ள சிக்கல்களை லெனின் மிக எளியமுறையில் கடந்து சென்றிருக்கிறார். மிகப் பெரிய அமைப்பைக் கட்டி, வழிநடத்தும் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள், அதில் செயல்படுபவர்கள் எவ்வாறு தன்னுடன் பணிபுரிபவர்களுடன் பழக வேண்டும், உழைக்கும் மக்களுடனான உறவை எப்படிப் பேண வேண்டும், நவீன தொழில்நுட்பம் உட்பட எல்லாத்துறைகளைப் பற்றியும் எப்படித் தெரிந்து கொண்டிருக்க வேண்டும், அடிமட்டத் தொண்டர்களுடன் நேரடியாகப் பழகி எப்படி அவர்களுடனான உறவை வலுப்படுத்த வேண்டும் என்பதற்கான வழிகாட்டியாக இந்நூல் உள்ளது. மக்களுக்கான சரியான அமைப்பை ஏற்படுத்த விரும்புபவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா!

நடிகை அனுபமாவின் புதிய படத்தின் அறிமுக விடியோ!

அறிவோம்...!

வளம் தரும் வராக ஜெயந்தி

சன் ரைசர்ஸை எதிர்கொள்ளும் வழியை கற்றுக் கொடுத்த ஆர்சிபி: இயான் மோர்கன்

SCROLL FOR NEXT