நூல் அரங்கம்

குழந்தை மருத்துவம்

DIN

குழந்தை மருத்துவம் - குன்றத்தூர் ராமமூர்த்தி; பக்.160; ரூ.140; கற்பகம் புத்தகாலயம், சென்னை-600 017; )044- 2431 4347.
 இன்றையச் சூழலில் குழந்தைகளைத் தாக்கும் நோய்கள் ஏராளமாக இருக்கின்றன. இதனைப் போக்க பாரம்பரியமாய் நமது முன்னோர்கள் கைக்கொண்ட மருத்துவமுறைகளைப் பகிர்ந்து கொள்ளும் நோக்கத்துடன் இந்நூல் எழுதப்பட்டு இருக்கிறது.
 குழந்தைகளுக்கு ஏற்படும் வயிறு உப்புசம், பால் குடிக்க மறுத்தல், மலங்கட்டுதல், சிறுநீர் வெளியேறாமை, பேதி, கிரந்தி நோய் என பல நோய்களைப் பற்றிய விவரங்கள் கூறப்பட்டுள்ளன.
 மேலும் குழந்தைகளுக்கு ஏற்படும் கரப்பான், காய்ச்சல், குடற்புழு, ரத்தசோகை, வலிப்பு நோய் போன்ற பல நோய்களுக்கான மருத்துவமும் இந்நூலில் கூறப்பட்டுள்ளது.
 புட்டிப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் இதயநோய்கள் வர வாய்ப்பிருப்பதால் அதைத் தவிர்க்கும்படி நூலாசிரியர் வற்புறுத்துகிறார். குழந்தைகளுக்கு என்ன உணவுகள் கொடுக்கலாம் என விரிவாக இந்நூல் கூறுகிறது. குழந்தை மருத்துவம் என்பதைத் தாண்டி நலமான குழந்தை வளர்ப்பை இந்நூல் நமக்கு அறிமுகப்படுத்துகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னஞ்சிறு கிளியே.. ரவீனா தாஹா!

சூர்யா படத்துக்கு முன்பாக இளம் நாயகனை இயக்கும் சுதா கொங்கரா?

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கம் கண்டெடுப்பு

கேரளத்தில் வாக்குப்பதிவின் போது மயங்கிவிழுந்து 4 பேர் பலி!

அழகு தேவதை - சாக்ஷி அகர்வால்!

SCROLL FOR NEXT