நூல் அரங்கம்

வடலூர் வரலாறு

DIN

வடலூர் வரலாறு - கற்காலம் முதல் தற்காலம் வரை -ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன்; பக்.160; ரூ.200; வெர்சோ பேஜஸ் பதிப்பகம், எண்.56, ஜவகர் மெயின்ரோடு, என்ஆர்டி நகர், தேனி-625531.
 வடலூரின் தோற்றம் முதல் நிகழ்காலம் வரையிலான வரலாற்றைக் கூறும் நூல்.
 பார்வதிபுரம் வடலூரான வரலாறு, இராமலிங்க பெருமானின் வரலாறு என வரலாற்றுக் களஞ்சியமாக இந்நூல் திகழ்கின்றது. திருவருட்பாவில்தான் வடலூர் என்ற பெயர் முதன்முதலாககுறிப்பிடப்பட் டுள்ளது என்ற செய்தியை நூலாசிரியர் பதிவு செய்துள்ளார்.
 கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூரில் சைவம், வைணவம், சமணம், பெளத்தம், கிருத்துவம், இசுலாம் போன்ற மதங்களின் தாக்கம் பற்றியும், அம்மதங்கள் எப்படி மனிதத்தையும், மதநல்லிணக்கத்தையும் பேணி வருகிறது என்பதையும் இந்நூல் வரலாற்றுச் சான்றுகளின் அடிப்படையில் விவாதிப்பது சிறப்பு.
 களஆய்வில் புதியதாக கண்டுபிடிக்கப்பட்ட புதிய சான்றுகள், முந்தைய அகழாய்வுச் சான்றுகள், இலக்கியம், கல்வெட்டுகள், நாணயங்கள், சிற்பங்கள், வெளிநாட்டினரின் குறிப்புகள் போன்ற தரவுகளைக் கொண்டு வடலூர் வரலாற்றைக் கட்டமைத்த நூலாசிரியரின் பணி, வளரும் ஆய்வாளர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறது.
 காந்தியின் கடலூர் வருகை, சுதந்திரப் போராட்ட பெண் போராளி வீரமங்கை அஞ்சலையம்மாள், ஆஷ்துரையை கொல்வதற்கு புதுவையில் துப்பாக்கி பயிற்சி முடித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் புகைவண்டி நிலையத்திலிருந்து புறப்பட்ட வாஞ்சிநாதனின் வரலாறு போன்ற நிகழ்வுகள் படிப்போரை அக்காலத்திற்கே அழைத்து செல்வதாக உள்ளது.
 வடலூரின் வரலாற்று நிகழ்வுகளை எளிய நடையில் விரிவாகவும், விளக்கமாகவும் எழுதியுள்ளார் நூலாசிரியர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

SCROLL FOR NEXT