நூல் அரங்கம்

கடோபநிஷத்

1st Dec 2021 06:05 PM

ADVERTISEMENT

கடோபநிஷத் -  விளக்கவுரை- க. மணி;
பக். 264;ரூ. 350; அபயம் பப்ளிஷர்ஸ், 19, ஏகேஜி நகர் முதல் தெரு, உப்பிலிபாளையம், கோவை - 15. 

உபநிஷத்துகளில் தனிச்சிறப்பு கொண்டது கடோபநிஷத். பெரியதும்கூட. 119  மந்திரங்களைக் கொண்டது. கடோபநிஷத்துக்குத்  தமிழில் நிறைய உரைகள் வந்திருக்கின்றன. எல்லாரும் படித்து எளிதில் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது இந்த  விளக்கவுரை.

விச்வஜித் யாகத்தில் அதிருப்தியுற்று எழுப்பும் கேள்வியால் ஆத்திரமுற்று, எமனுக்கே தானமாகத் தருவேன் என்று தந்தையால் கூறப்படுகிறான்  அல்லது சபிக்கப்படுகிறான் மகன் நசிகேதஸ்.
மூன்று இரவுகள் காத்திருந்து தன்னைச் சந்திக்கும் நசிகேதஸுக்கு மூன்று வரங்கள் அருளுவதாகக்  கூறுகிறார் எமதர்மன்.

தந்தை கோபம் நீங்கியவராகத் தன்னை வரவேற்க வேண்டும், சொர்க்கம் செல்வதற்கான வழிவகை என்ன? என்ற இரு வரங்களைத் தரும் எமதர்மனைத் திகைக்க வைக்கிறது நசிகேதஸ் கேட்கும் மூன்றாவது வரம்:  இறப்புக்குப் பின் மனிதன் என்னவாகிறான்? என்பதே. "அதை மட்டும் கேட்காதே' என்று கூறி வரம் அருளத் தயங்கும் எமதர்மனுக்கும் நசிகேதஸýக்கும் நடைபெறும் நெடிய உரையாடல்தான் கடோபநிஷத்.
ஒவ்வொரு மந்திரத்தையும் குறிப்பிட்டு, ஒவ்வொரு சொல்லுக்கும் பொருளைக் குறிப்பிட்டுள்ளதுடன் அந்த மந்திரத்தைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளதுடன், அதைப் பற்றிய விரிவான விளக்கமும் தரப்பட்டுள்ளது. மீண்டும் மீண்டும் கற்பதன் மூலம் அவரவர் உணர்ந்தறியக் கூடிய சில இணைக்கும் விஷயங்களைப் பற்றியும் கூட விளக்கியுள்ளார் ஆசிரியர்.

துவைத நிராகரணம் போல எளிதில் விளங்கிக் கொள்ள முடியாத  விஷயங்கள்கூட, தொடக்கநிலை வாசகர்களுக்கும் புரியுமாறு,  ஒவ்வொன்றும் விரிவாக விளக்கப்பட்டிருப்பது சிறப்பு. 
 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT