நூல் அரங்கம்

ஏர் இந்தியாவின் தந்தை ஜேஆர்டி டாட்டா

DIN

ஏர் இந்தியாவின் தந்தை ஜேஆர்டி டாட்டா - ஆர். நடராஜன்; பக்.176; ரூ.150; மணிவாசகர் பதிப்பகம்,  சென்னை - 104;  -044-2536 1039. 


 இந்தியாவில் இரும்பு, எஃகு ஆலை, மின்சார ஆலை உள்ளிட்ட இன்றைய முக்கியத் தொழில் துறைகள் அனைத்துக்கும் அன்றே அடித்தளமிட்டவர் ஜாம்ஷெட்ஜி டாட்டா.   ஜாம்ஷெட்ஜியின் டாட்டா குழுமம் பல்வேறு தொழில்களை வெற்றிகரமாக நடத்திவந்த போதிலும், அவரது பெயரன் ஜே.ஆர்.டி. டாட்டாவுக்கு விமானத்துறை மீது தணியாத ஆர்வம் இருந்தது. விமானம் ஓட்டுவதற்குப் பயிற்சி பெற்று இந்தியாவின் முதல் விமானியானது மட்டுமல்லாது, அன்றைய ஆங்கில அரசின் அனுமதியுடன் முதல்முதலில் கராச்சி - பம்பாய் இடையே விமான தபால் போக்குவரத்தை சொந்தமாகத் தொடங்கினார் ஜே.ஆர்.டி. டாட்டா.

 தனது குழுமம் நடத்தி வந்த மற்ற லாபகரமான தொழில்களைக் காட்டிலும் அன்றைக்கு அதிக லாபம் தராத விமானத்துறை மீது கூடுதல் கவனம் செலுத்தி அதை வளர்த்தெடுத்து இந்திய விமானத்துறையின் முன்னோடியாக ஜே.ஆர்.டி. டாட்டா விளங்கினார். நாடு சுதந்திரமடைந்த பிறகு, 

டாட்டாவின் விமான நிறுவனம் "ஏர் இந்தியா' என நாட்டுடைமையாக்கப்பட்டது. விமானத்துறையை அரசு கண்காணிக்கலாமே தவிர, தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரக் கூடாது என டாட்டா வாதிட்டார். ஆனால் அவரது வாதம் எடுபடவில்லை. தான் வளர்த்தெடுத்த நிறுவனம் என்பதால் ஊதியமில்லாமல் ஏர் இந்தியாவின் தலைவராகப் பணியாற்றினார். தரமான சேவைக்கும், நேரம் தவறாமைக்கும் முன்னுதாரணமாக ஏர் இந்தியாவை டாட்டா உருவாக்கினார். பின்னாளில் அரசியல் தலையீடு காரணமாக ஏர் இந்தியாவின் நிர்வாகத்தில் சீர்குலைவும் பெரும் நஷ்டமும் ஏற்பட்டன.  பெரும் நஷ்டத்தில் இயங்கி வந்த ஏர் இந்தியாவை அரசிடமிருந்து டாட்டா குழுமம் ஏலத்தின் மூலம் சமீபத்தில் கைப்பற்றியிருக்கிறது. 

 தனது குழுமத்தின் வளர்ச்சி மட்டுமல்லாது, தேச வளர்ச்சியிலும் பங்கெடுத்த டாட்டா குழுமத்தை விரிவாக அலசும் இந்த நூல், இளம் தொழில்முனைவோர்களுக்கு ஆர்வத்தையும் உற்சாகத்தையும் அளிக்கும் விதமாக பல்வேறு சுவாரஸ்ய நிகழ்வுகளையும் பதிவு செய்துள்ளது.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT