செய்திகள்

12 ராசிக்கும் இந்த வாரம் எப்படி இருக்கும்? தெரிஞ்சிகோங்க!

30th Sep 2022 05:24 PM

ADVERTISEMENT

இந்த வாரப் பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் கணித்து வழங்கியுள்ளார். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

குடும்பத்தினரிடம் அன்பு அதிகரிக்கும்.  திட்டமிட்ட காரியங்களில் ஈடு
படுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் கெடுபிடிகளிலிருந்து விடுபடுவார்கள். வியாபாரிகள் கூட்டாளிகளுடன் இணக்கமாகப் பழகுவீர்கள்.

விவசாயிகள் கால்நடைகளால் வருவாய் பெறுவார்கள்.  அரசியல்வாதிகள் பயணம் செய்வார்கள்.  கலைத்துறையினர் பெயர், கௌரவத்துக்கு எந்தக் குறைவும் உண்டாகாது.

ADVERTISEMENT

பெண்கள் உடன்பிறந்தோரிடம் தேவையான உதவிகளைப் பெறுவார்கள்.  மாணவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவார்கள்.

சந்திராஷ்டமம் - 30,31.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

வழக்குகளில் எதிர்பார்த்த வாய்தா கிடைக்கும்.  குடும்பத்தில் நிம்மதி குறையும். தந்தை வழி சொத்துகளில் இருந்த வில்லங்கம் தீரும். உத்தியோகஸ்தர்கள் இயந்திர வாழ்க்கையில் இருந்து விடுபட்டு சிந்தனைகளுக்குச் செயல்வடிவம் கொடுப்பார்கள்.  

வியாபாரிகள் போட்டிகளைச் சமாளிப்பார்கள். விவசாயிகள் சிறப்பான விளைச்சலைக் காண்பார்கள். அரசியல்வாதிகளுக்கு பிரச்னைகள் குறையும். கலைத்துறையினருக்கு நல்ல வருவாய் கிடைக்கும்.

பெண்கள் குடும்பத்தில் இணைக்கமாகப் பழகுவார்கள்.  மாணவர்கள் படிப்பில் அக்கறை காட்டுவீர்கள்.

சந்திராஷ்டமம் - 2,3.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

விடாமுயற்சிகள் வெற்றி பெறும். புதிய திட்டங்களைச் செயல்படுத்துவீர்கள்.   வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் வேலைகளைப் பகிர்ந்துகொள்வார்கள்.

வியாபாரிகளுக்கு கடன் வசூலாகும். விவசாயிகள் சண்டைகள் நேராமல் பார்த்துகொள்ளவும்.. அரசியல்வாதிகள் தடைகளைச் சாதகமாக்கிக் கொள்வார்கள். கலைத்துறையினர் ரசிகர்களை அனுசரித்து கொள்வார்கள்.

பெண்களுக்கு பெரியோரின் ஆசி கிடைக்கும். மாணவர்கள் புதிய ஆராய்ச்சிகளில் வெற்றி பெறுவார்கள்.
சந்திராஷ்டமம்}4,5.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும்.  எடுத்த காரியங்கள் வெற்றி பெறும். பொருளாதார நிலைமை சீரமையும். உடன்பிறந்தோரை அனுசரித்துச் செல்லவும்.

உத்தியோகஸ்கர்கள் அலுவலக ரீதியான பயணங்களால் நன்மை அடைவார்கள்.  வியாபாரிகள் மேன்மையைக் காண்பார்கள். விவசாயிகளுக்கு நீர்வரத்து நன்றாக இருக்கும்.

அரசியல்வாதிகள் புதிய பொறுப்புகளை ஏற்பார்கள். கலைத்துறையினர் அனுகூலமான திருப்பங்களைக் காண்பார்கள், பெண்கள் வயிறு உபாதைகளால் பாதிக்கப்படலாம். மாணவர்கள் தடைகளைக் கடந்து வெற்றி பெறுவார்கள்.

சந்திராஷ்டமம் - 6

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

தொழிலில் மாற்றங்களைச் செய்வீர்கள். பொருளாதாரம் முன்னேற்றமாகவே இருக்கும். தெய்வ அனுக்கிரகம் சிறப்பாகவே இருக்கும். எடுத்த காரியங்கள் நிறைவேறும்.

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் நெருக்கம் காட்ட வேண்டாம். வியாபாரிகள் மறைமுகப் போட்டிகளைச் சாதூர்யமாகச் சமாளிப்பார்கள். விவசாயிகள் விவசாயப் பணிகளில் தொய்வில்லாமல் ஈடுபடுவார்கள். அரசியல்வாதிகளின் செயல்கள் சாதனைகளாக மாறும்.

கலைத்துறையினர் ஒப்பந்தங்களைச் செய்வார்கள்.  பெண்கள் சிந்தித்து செயல்படுவார்கள். மாணவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

தொழிலில் கடுமையாகப் பாடுபட்டு உழைப்பீர்கள். வருவாய் வரத் தொடங்கும். பூர்வீக சொத்துகளில் இருந்த பிரச்னைகள் தீரும்.

உத்தியோகஸ்தர்கள் போட்டித் தேர்வுகளை எழுதுவார்கள். வியாபாரிகள் முயற்சிகளில் பின்வாங்காமல் வெற்றி பெறுவீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாகவே இருக்கும். அரசியல்வாதிகள் மேலிடத்தை அனுசரித்து நடந்துகொள்வார்கள்.  

கலைத்துறையினர் சுற்றுலா செல்வார்கள். பெண்கள் இல்லத்துக்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவார்கள். மாணவர்கள் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

உறவினர்கள், நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் பயணம் 
உண்டாகும். அரசு வழியில் நன்மைகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களின் சமயோஜித புத்தியை மேலதிகாரிகள் பாராட்டுவார்கள்.

வியாபாரிகள் கூடுதல் அக்கறையோடு வியாபாரம் செய்யவும். விவசாயிகள் பாசன வசதிகளுக்குச் செலவு செய்வார்கள். 

அரசியல்வாதிகள் சமூகத்தில் அந்தஸ்து உயரக் காண்பார்கள். கலைத்துறையினரின் கற்பனைச் சக்தி அதிகரிக்கும். பெண்கள் கோயில் தரிசனங்களில் பங்கேற்பார்கள். மாணவர்கள் எதிர்பார்த்த நன்மை 
உண்டாகும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

மனதுக்கினிய பயணம் செய்வீர்கள்.  குடும்பத்தினரிடம் அன்பு டன் பழகுவீர்கள். சுப நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகள் கொடுத்து வந்த கஷ்டம் விலகும்.

வியாபாரிகள் கௌரவம், அந்தஸ்து சக வியாபாரிகள் மத்தியில் உயரும். விவசாயிகள் புதிய குத்தகை எடுப்பதைத் தள்ளிப் போடவும். அரசியல்வாதிகள் மாற்றுக் கட்சியினரை அனுசரித்து நடப்பார்கள்.

கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்கள் கணவரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். மாணவர்களுக்கு 
கல்வியில் ஆர்வம் உண்டாகும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

அறிவும் ஆற்றலும் பளிச்சிடும். உறவினர்கள், நண்பர்கள் இல்லம் தேடி 
வருவார்கள். பொருளாதார நிலைமை நன்றாகவே இருக்கும். உடன்பிறந்தோருக்கு உதவி செய்வீர்கள்.

வியாபாரிகள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். விவசாயிகள் நல்ல விளைச்சலைக் காண்பார்கள். அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்திடம் பொறுமையோடு நடந்துகொள்வார்கள்.

கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். பெண்கள் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து நடக்கவும். மாணவர்கள் ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

தொழிலில் புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்துவீர்கள். பண வரவு நன்றாகவே இருக்கும். குடும்பத்தில் மருத்துவச் செலவு ஏற்படாது. 

உத்தியோகஸ்தர்களின் உழைப்பு வீண் போகாது. வியாபாரிகள் முயற்சிக்கேற்ப லாபத்தைப் பெறுவீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். அரசியல்வாதிகள் செயல்பாடுகளை மாற்றிக் கொள்ளவும்.

கலைத்துறையினரின் எண்ணங்கள் பூர்த்தியாகும். பெண்களுக்கு கணவருடனான ஒற்றுமை அதிகரிக்கும். மாணவர்கள் கடுமையாக முயற்சித்து படித்தால் நல்ல மதிப்பெண்களைப் பெறலாம்.
சந்திராஷ்டமம் - இல்லை.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

தொழிலில் வெற்றி பெறுவீர்கள். பொருளாதாரம் மேன்மையாக இருக்கும். சிலர் வீடு, வாகனம் வாங்குவார்கள். மனதில் கவலைகள் இருக்கும்.

உத்தியோகஸ்தர்கள் கடமை தவறாமல் உழைக்கவும். வியாபாரிகளுக்கு கொடுக்கல்} வாங்கல் விஷயங்கள் சீராகவே இருக்கும்.  விவசாயிகள் புதிய உபகரணங்களை வாங்குவார்கள்.  

அரசியல்வாதிகளின் மதிப்பு அதிகரிக்கும். கலைத்துறையினர் திறமைகளை வளர்த்துகொள்ளவும்.  பெண்களுக்கு நினைத்தது காரியங்கள் நடந்தேறும். மாணவர்களுக்கு சக மாணவர்கள், பெற்றோரின் ஆதரவு கிடைக்கும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

உடல் உபாதைகளிலிருந்து விடுபடுவீர்கள். திட்டமிட்ட பணிகள் நடந்தேறும். மனச்சோர்வு நீங்கும். ஆன்மிகச் சிந்தனைகளால் பலம் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் ஊதியம், பதவி உயர்வுகளைப் பெறுவார்கள்.

வியாபாரிகள் வியாபாரத்தைப் பெருக்குவார்கள். விவசாயிகள் புதிய குத்தகை முயற்சிகளைத் தள்ளி வைக்கவும். அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தின் சம்மதத்துடன் எதையும் செயல்படுத்தவும்.

கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.  பெண்களுக்கு கணவருடனான கருத்து வேறுபாடுகள் நீங்கும். மாணவர்கள் விளையாட்டுகளில் வெற்றி பெறுவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT