செய்திகள்

பிரம்மோற்சவத்தின் நான்காம் நாள்: கற்பக விருட்ச வாகனத்தில் மலையப்பசுவாமி!

தினமணி


திருப்பதி பிரம்மோற்சவத்தின் நான்காம் நாளான இன்று கற்பக விருட்சத்தில் மலையப்பசுவாமி எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார். 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 27-ஆம் தேதி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

பிரம்மோற்சவத்தின் முதல் நாளில் பெரிய சேஷ வாகனத்திலும், இரண்டாவது நாளில் சின்னசேஷ வாகனத்திலும், அன்றிரவு அன்னப்பறவை வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

மூன்றாவது நாள் காலையில் சிம்ம வாகனத்தில் மலையப்பசுவாமி யோக நரசிம்மர் அலங்காரத்தில் நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதைத்தொடர்ந்து நேற்றிரவு முத்து பந்தல் வாகனத்தில் மலையப்பசுவாமி தயார்களுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். 

நான்காம் நாளான இன்று கற்பக விருட்சத்தில், ராஜ மன்னர் அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளி நான்கு மாட வீதிகளிலும் அருள்பாலிக்க உள்ளார். 

இந்நிலையில், திருப்பதி பிரம்மோற்சவத்தின் முக்கிய வாகன சேவையான கருட சேவை நாளை இரவு நடைபெறுகிறது. கருட சேவையில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பார்கள் என்பதால் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

பேருந்துகளுக்கு இடையூறு ஏற்படுவதைத் தடுக்கும்வகையில் நாளை முதல் அக்டோபர் 5 வரை மலைப்பாதையில் இருசக்கர வாகனங்கள் இயக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகர்!

சின்னஞ்சிறு கிளியே.. ரவீனா தாஹா!

சூர்யா படத்துக்கு முன்பாக இளம் நாயகனை இயக்கும் சுதா கொங்கரா?

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கம் கண்டெடுப்பு

கேரளத்தில் வாக்குப்பதிவின் போது மயங்கிவிழுந்து 4 பேர் பலி!

SCROLL FOR NEXT