செய்திகள்

ரிஷப ராசியினர் இதைக் குறைத்துக்கொள்ள வேண்டும்: வாரப் பலன்கள்!

9th Sep 2022 03:46 PM

ADVERTISEMENT

இந்த வாரப் பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் கணித்து வழங்கியுள்ளார். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உடன்பிறந்தோரின் வழியில் எதிர்பார்த்த பொருளாதாரம் சிறப்பாக அமையும். கடன்களை அடைத்து விடுவீர்கள். அந்தஸ்து உயரும். புதிய பொறுப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். 

வியாபாரிகள் கொடுக்கல் - வாங்கலில் சீரான நிலையைக் காண்பார்கள். விவசாயிகள் மகிழ்ச்சியுடன் விவசாயப் பணிகளில் ஈடுபடுவார்கள். 

ADVERTISEMENT

அரசியல்வாதிகள் தொண்டர்களிடம் கருத்துகளைத் திணிக்காதீர்கள். கலைத்துறையினர் மனம் திறந்து பேச வேண்டாம். பெண்கள் மகிழ்ச்சியான பணம் மேற்கொள்வர். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

தொழிலில் வெற்றி உண்டாகும். உங்கள் நல்லெண்ணத்தில் மற்றவர்கள் துஷ்பிரயோகம் செய்ய அனுமதிக்காதீர்கள். குடும்பத்தில் நிம்மதி நிறையும். மருத்துவச் செலவுகள் குறையும். 

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படுவார்கள். கோபத்தைக் குறைத்துக் கொள்ளவும். விவசாயிகள் கடுமையாக உழைப்பார்கள். 

அரசியல்வாதிகள் உள்கட்சி விவகாரங்களில் தலையிட வேண்டாம். கலைத்துறையினருக்கு விருதுகள் கிடைக்கும்.  பெண்களுக்கு உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். மாணவர்கள் விளையாட்டுகளில் கவனமாக இருக்கவும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

தொழிலில் புத்துணர்ச்சியுடன் நடந்துகொள்வீர்கள்.  பிடிவாதக் குணத்தைக் குறைத்துகொள்ளவும்.   கடன் பிரச்னை இருக்காது. புதிய வாகனங்களை வாங்குவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பிரச்னைகளைச் சமாளிப்பீர்கள். வியாபாரிகள் கடன் கொடுக்க வேண்டாம். விவசாயிகள் கொள்முதலில் லாபம் காண்பார்கள். அரசியல்வாதிகளுக்கு வெளியூர் பயணங்களால் நன்மை உண்டாகும். 

கலைத்துறையினருக்கு வருவாய் கூடும். பெண்கள் ஆடை, அணிகலன்களை வாங்குவார்கள். மாணவர்கள் பிறருக்கு உதவி செய்வார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

பிறரின் எண்ணங்களுக்கேற்ப நடப்பீர்கள்.  உடன்பிறந்தோரைப் பற்றி புதிய கண்ணோட்டம் உண்டாகும்.  புகழ், அந்தஸ்து உயரும்.  உத்தியோகஸ்தர்களுக்கு புதிய பொறுப்புகள் வந்தடையும்.  

வியாபாரிகள் அதிர்ஷ்டமான வாய்ப்புகளைப் பெறுவார்கள். விவசாயிகள் புதிய நிலங்களை வாங்க முன் பணம் அளிப்பார்கள். அரசியல்வாதிகள் தொண்டர்களுக்கு உதவுவார்கள்.  

கலைத்துறையினர் பயனற்ற பேச்சுகளைக் குறைத்துக் கொள்ளவும். பெண்கள் குடும்பத்தினருடன் பாசத்துடன் இருப்பார்கள். மாணவர்கள் ஆசிரியர்களுடன் பணிவாக நடந்துகொள்வார்கள்.

சந்திராஷ்டமம் - 9,10.

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

பெயர், கௌரலம் கூடத் தொடங்கும்.  காரியங்களைத் திட்டமிட்டு செயல்படுத்துவீர்கள்.  நெடுநாளைய ஆசை நிறைவேறும். உத்தியோகஸ்தர்கள் கடினமான வேலைகளைச் செய்து முடிப்பார்கள். 

வியாபாரிகள் நண்பர்களுக்கு உதவி செய்வார்கள். விவசாயிகளுக்கு மகசூல் சிறப்பாக இருக்கும். அரசியல்வாதிகள் இணக்கமாக நடந்துகொள்வார்கள். கலைத்துறையினர் நிலவிவந்த மந்தத்தன்மை மறையும்.  பெண்கள் குடும்பத்தில் அமைதியைக் காண்பார்கள். மாணவர்கள் உடல் ஆரோக்கியத்தையும், மன வளத்தையும் காப்பாற்றிக் கொள்வார்கள்.

சந்திராஷ்டமம் - 11,12.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

தொழில் சீராக நடக்கத் தொடங்கும். பெற்றோரின் ஆதரவு மன நிறைவை அளிக்கும். குலத் தெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.  பிறரின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். 

உத்தியோகஸ்தர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். வியாபாரிகள் எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சலில் புழு, பூச்சிகளின் தொல்லை இருக்காது. 

அரசியல்வாதிகளுக்கு மேலிட ஆதரவு உண்டு. கலைத்துறையினரின் பெயருக்கு எந்தக் குறையும் இருக்காது. பெண்கள் திருப்பணிகளில் ஈடுபடுவார்கள். மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆதரவு உண்டு.

சந்திராஷ்டமம் - 13,14,15.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

திட்டமிட்டப் பணிகள் நிறைவு பெறும். மறைந்திருந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.

தொழில் வளர்ச்சிப் பணியில் செல்லும். உடன்பிறந்தோரின் ஆதரவு உண்டு. உத்தியோகஸ்தர்கள் வேலையில் கவனம் செலுத்தவும். வியாபாரிகளுக்கு வியாபாரம் சீராகவே நடக்கும். விவசாயிகள் புதிய குத்தகைகளைப் பெறுவார்கள்.

அரசியல்வாதிகள் எதிர்பாராத வருவாயைப் பெறுவார்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைத் திறம்பட முடித்துக் கொடுப்பார்கள்.

பெண்களின் ஆரோக்கியம் மேம்படும். மாணவர்கள் பெற்றோரிடம் நன்கு பழகுவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

தன்னம்பிக்கையும் தனித்தன்மையும் கூடும். குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுத்து நடந்துகொள்வீர்கள். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும்.

உத்தியோகஸ்தர்கள் ரகசியங்களைப் பகிர வேண்டாம்.  வியாபாரிகள் கூட்டாளிகளிடம் அனுசரித்து நடந்துகொள்ளவும்.

விவசாயிகளுக்கு கொள்முதல் லாபம் கிடைக்கும். அரசியல்வாதிகள் புதிய பயணங்களால் நன்மை அடைவார்கள்.

கலைத்துறையினர் நிர்ணயித்த இலக்குகளை அடைந்துவிடுவார்கள். பெண்கள் சேமிப்பை கூட்டிக் கொள்வார்கள். மாணவர்கள் யோகா, தியானத்தைப் பயில்வார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

எடுத்த காரியங்களை மனம் தளராது செய்து முடிப்பீர்கள்.   ஆன்மிகத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.  கடனைத் திருப்பி அடைப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த வருமானத்தைப் பெறுவார்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல்} வாங்கலில் பிரச்னைகள் தீரும்.  

விவசாயிகள் லாபத்தைப் பெறுவார்கள். அரசியல்வாதிகள் தொண்டர்களுக்கு உதவிகளைச் செய்வார்கள்.

கலைத்துறையினர் ரசிகர்களின் அன்புக்குப் பாத்திரமாவார்கள். பெண்கள் தேவையற்ற பயணத்தைத் தவிர்க்கவும். மாணவர்கள் புதிய பாடப்பிரிவுகளில் சேருவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

பணம் வரத் தொடங்கும். பங்கு வர்த்தகத்தில் லாபம் கிடைக்கும். மகிழ்ச்சியான செய்திகள் வரும். வழக்குகளில் நல்ல தீர்வு கிடைக்கும். 

உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் பாராட்டுகளைப் பெறுவார்கள். வியாபாரிகள் வருவாயை ஈட்டுவார்கள். விவசாயிகள் பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்வார்கள்.

அரசியல்வாதிகள் கவனமாகப் பணியாற்றவும். கலைத்துறையினர் உயர்நிலையை எட்டுவார்கள். பெண்களுக்கு மருத்துவச் செலவுகள் குறையும். மாணவர்கள் பெற்றோரின் அறிவுறுத்தல்களைக் கேட்டு நடப்பார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

பூர்வீகச் சொத்துகளால் ஆதாயம் கிடைக்கும்.  சுப காரியங்கள் நடக்கும். நேர்மறை சிந்தனைகள் அதிகரிக்கும். உடலில் பொலிவும் நடையில் மிடுக்கும் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்து நடக்கவும். வியாபாரிகள்  முன்னேற்றத்தைக் காண்பார்கள்.  விவசாயிகள் விளைச்சலால் மகிழ்ச்சி அடைவார்கள்.

அரசியல்வாதிகளுக்கு படிப்படியாக வளர்ச்சி உண்டு. கலைத்துறையினர் புதிய நுட்பங்களைக் கற்பார்கள். பெண்கள் அதிர்ஷ்ட வாய்ப்புகளைப் பெறுவார்கள். மாணவர்கள் பிறரின் பாராட்டுகளைப் பெறுவார்கள்.

சந்திராஷ்டமம் : இல்லை.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

அரசு சலுகைகள் கிடைக்கும். புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். குடும்பத்தாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறையும். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். 

உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிவோர் பற்றிய கண்ணோட்டத்தில் மாற்றம் ஏற்படும். 

வியாபாரிகள் போட்டிகளைச் சமாளிப்பார்கள். விவசாயிகள் சக விவசாயிகளின் ஆர்வமின்மையைப் பெரிதுபடுத்த மாட்டார்கள்.

அரசியல் வாதிகள் பயணங்களை மேற்கொள்வார்கள். பெண்களுக்கு பிறரின் ஆதரவு கிடைக்கும். மாணவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம் : இல்லை.

ADVERTISEMENT
ADVERTISEMENT