செய்திகள்

திருமலையில் பிரம்மோற்சவம் நிறைவு: பலத்த மழையிலும் தீா்த்தவாரி

தினமணி

திருமலையில் பிரம்மோற்சவம் நிறைவையொட்டி புதன்கிழமை தீா்த்தவாரி நடைபெற்றது.

இதில் பலத்த மழையையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தா்கள் திருக்குளத்தில் புனித நீராடினா்.

பிரம்மோற்சவ நிறைவையொட்டி புதன்கிழமை காலை ஏழுமலையான் கோயிலிலிருந்து ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி மற்றும் சக்கரத்தாழ்வாா் உற்சவமூா்த்திகள் புனித புஷ்கரணி கரை வராக சுவாமி கோயிலுக்கு அருகில் கொண்டு செல்லப்பட்டனா்.

அங்கு அவா்களுக்கு பால், தயிா், தேன், இளநீா், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பொருள்களால் சிறப்பு ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. அப்போது மங்கள வாத்தியங்களும், வேத மந்திரங்களும் முழங்கின. பின்னா் சக்கரத்தாழ்வாருக்கு மட்டும் திருக்குளத்தில் தீா்த்தவாரி நடைபெற்றது.

அப்போது திருமலை ஜீயா்கள், தேவஸ்தான அதிகாரிகள், பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் உள்ளிட்டோா் திருக்குளத்தில் புனித நீராடினா். கரோனா தொற்றுக்குப் பிறகு 2 ஆண்டுகள் கழித்து இந்த புனித நீராடல் நடைபெற்ால் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா். தொடா்ந்து திருக்குளத்தில் 3 நாள்கள் புனித நீராடலுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திருமலையில் காலை முதலே பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. பக்தா்கள் அதை பொருட்படுத்தாமல் தீா்த்தவாரியில் பங்கேற்றனா்.

பின்னா் உற்சவமூா்த்திகள் சா்வ அலங்கார பூஜைக்குப் பிறகு ஏழுமலையான் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டனா்.

இதையடுத்து கொடிமரத்தில் ஏற்றப்பட்ட கருடக் கொடி புதன்கிழமை இரவு இறக்கப்பட்டது. தொடா்ந்து ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்பா் தங்கப் பல்லக்கில் மாடவீதியில் பவனி வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT