செய்திகள்

திருப்பதியில் செப்.27-ல் பிரம்மோற்சவம் தொடக்கம்

1st Jul 2022 04:22 PM

ADVERTISEMENT

 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்தாண்டுக்கான பிரம்மோற்சவம் செப்.27-ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 

திருமலையில் வருடாந்திர பிரம்மோற்சவம் நடத்துவது குறித்து ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. ஆய்வு கூட்டத்துக்கு பின் தேவஸ்தான செயல் அதிகாரி தர்மா ரெட்டி செய்தியாளர்களைச் சந்தித்தார். 

அப்போது அவர் கூறுகையில், 

ADVERTISEMENT

கரோனா குறைந்து இயல்பு நிலைக்கு வந்துள்ளதையடுத்து, கடந்தாண்டை விட இந்தாண்டு வெகு விமரிசையாக பிரம்மோற்சவம் நடத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. 

அதன்படி, செப்டம்பர் 27-ல் பிரம்மோற்சவம் தொடங்குகிறது. பிரம்மோற்சவம் நடைபெறும் 9 நாள்களும் 4 மாடவீதிகளில் சாமி ஊர்வலம் விமரிசையாக நடைபெற உள்ளது. அக்டோபர் 5-ம் தேதியுடன் பிரமோற்சவம் நிறைவு பெறுகிறது.

பிரம்மோற்சவத்தின் போது மாற்றுத்திறனாளிகள், குழந்தையுடன் பெற்றோர் செல்லும் தரிசனமும், விஐபி தரிசனமும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT