செய்திகள்

திருப்பதியில் அலைமோதும் கூட்டம்: சுவாமி தரிசனத்திற்கு 20 மணி நேரம் காத்திருப்பு

13th Aug 2022 06:02 PM

ADVERTISEMENT

 

தொடர் விடுமுறை என்பதால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. 

இலவச தரிசனத்திற்குச் செல்லும் பக்தர்கள் 20 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள் கூட்டம் அதிகமானதால் தங்குவதற்கு அறைகள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். 

படிக்க: தினமும் பிரசாதம் சாப்பிடும் காகம்: உக்கம்பெரும்பாக்கம் கோயிலில் தொடரும் வினோதம்

வைகுண்டம் காம்ப்ளக்க்ஸ இருக்கும் 64 அறையிலும் நிரம்பியுள்ளதால், இலவச தரிசனத்திற்கு 3 கிலோ மீட்டர் தூரம் வரை பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். 

ADVERTISEMENT

அதேபோன்று, ரூ.300 சிறப்புக் கட்டண தரிசனத்திற்கு 5 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

படிக்க: அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும் இந்த ராசிக்கு: வாரப் பலன்கள்

பக்தர்கள் கூட்டம் நிரம்பி வருவதால் லட்டு பிரசாதத்திற்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

மேலும், கூட்டம் அதிகரித்துள்ளதால் விஐபி தரிசனங்கள் ரத்து செய்வதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT