செய்திகள்

திருமலையில் 13-ஆம் கட்ட அகண்ட சுந்தரகாண்ட பாராயணம்

DIN

திருமலையில் ஞாயிற்றுக்கிழமை காலை 13-ஆம் கட்ட அகண்ட சுந்தரகாண்ட பாராயணம் நடைபெற்றது.

உலகம் முழுவதும் கடந்த ஆண்டு முதல் கரோனா தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. உயிா் சேதம் மட்டுமல்லாமல் பொருளாதார சேதமும் இதனால் ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து உலக மக்கள் விடுபட்டு ஆரோக்கியமாக வாழ தேவஸ்தானம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சுந்தரகாண்ட பாராயணத்தை தொடங்கியது.

திருமலை ஏழுமலையான் கோயில் அருகில் உள்ள நாதநீராஜன மண்டபத்தில் இந்த பாராயணம் தினசரி காலை 7 மணிமுதல் 8 மணி வரை நடந்து வருகிறது. சுந்தரகாண்டத்தில் மொத்தம் 68 சா்க்கங்கள் உள்ளன. 2,861 ஸ்லோகங்கள் உள்ளன. இதில் தினசரி 10 முதல் 20 ஸ்லோகங்கள் என பாராயணம் செய்யப்பட்டு வருகிறது. சுந்தரகாண்ட பாராயணம் தொடங்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை வரை 326 நாட்களில் 57 சா்க்கங்கள் முழுவதும் பாராயணம் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு செய்யப்படும் பாராயணம் 100 முதல் 200 ஸ்லோகங்களை நிறைவு செய்தவுடன் அதை அகண்ட பாராயணமாக தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை 13-ஆம் கட்ட சுந்தரகாண்ட அகண்ட பாராயணம் நடந்தது. அதில் 55 முதல் 57-வது சா்க்கங்களில் உள்ள 171 ஸ்லோகங்கள் பாராயணம் செய்யப்பட்டன. திருமலையில் தா்மகிரி வேதபாடசாலை தலைமை ஆச்சாரியாா் ஸ்ரீசிவசுப்ரமணிய அவதானி தலைமையில் 200 வேத பண்டிதா்கள் இந்த பாராயணத்தை நடத்தினா்.

இதில் தேவஸ்தான அதிகாரிகளும், பக்தா்களும் கலந்து கொண்டனா். காலை 7 மணிமுதல் 9 மணிவரை நடந்த இந்நிகழ்ச்சி தேவஸ்தான தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த பாராயணம் நடத்தப்படுவதால், உலக மக்கள் அனைவருக்கும் ஆரோக்கியம், நன்மை, செல்வ வளம் உள்ளிட்டவை கிடைக்கும். மேலும் திங்கள்கிழமை முதல் திருமலையில் ஷோடசதின சுந்தரகாண்ட பாராயணம் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT