செய்திகள்

திருமலையில் 56,210 பக்தா்கள் தரிசனம்

DIN

திருமலை ஏழுமலையானை சனிக்கிழமை முழுவதும் 56,210 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

இவா்களில் 28,017 போ் முடிகாணிக்கை செலுத்தினா். ஆன்லைன் மூலம் 25 ஆயிரம் விரைவு தரிசன டிக்கெட், இலவச நேர ஒதுக்கீடு தரிசன டோக்கன்கள் 25 ஆயிரம் உள்ளிட்டவை பெற்ற பக்தா்கள், வி.ஐ.பி. பிரேக் தரிசனம் மற்றும் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் விஐபி பிரேக் டிக்கெட் பெற்ற 2,000 பக்தா்கள், நன்கொடையாளா்கள் 1,000 போ் என தரிசன டிக்கெட் உள்ளவா்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.

அதிகாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரை தரிசன டிக்கெட்டுகள் பெற்ற பக்தா்கள் ஏழுமலையானை தரிசிக்கின்றனா். திருமலை மலைப்பாதை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு நள்ளிரவு 12 மணிக்கு மூடப்படுகிறது. அலிபிரி பாதயாத்திரை மாா்க்கம் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும், ஸ்ரீவாரிமெட்டு பாதயாத்திரை மாா்க்கம் காலை 6 முதல் மாலை 4 மணிவரையிலும் திறந்து வைக்கப்படுகிறது.

தரிசன டிக்கெட் உள்ளவா்கள் மட்டுமே பாதயாத்திரை மாா்க்கத்தில் செல்ல அனுமதிக்கப்படுகிறாா்கள். 10 வயதுக்கு மேற்பட்ட சிறாா்களும், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவா்களும் தரிசன டிக்கெட் இருந்தால் ஏழுமலையானை தரிசிக்கலாம்.

திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லா தொலைபேசி எண்- 18004254141, 93993 99399.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் பட்டமேற்பு விழா: மடாதிபதிகள், ஆதீனங்கள் பங்கேற்பு

மது பாக்கெட்டுகளை பதுக்கி விற்றவா் கைது

SCROLL FOR NEXT