செய்திகள்

எதிர்பாராத பதவி உயர்வு கிடைக்கப்போகுது இவர்களுக்கு: வாரப் பலன்கள் (பிப்.26 - மார்ச் 4)

26th Feb 2021 03:46 PM

ADVERTISEMENT

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வாரப் (பிப்ரவரி 26 - மார்ச் 4) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

மனத்தெளிவுடன் உங்கள் காரியங்களைச் சட்டென்று நிறைவேற்றத் தொடங்குவீர்கள். நண்பர்களுக்கு அறிவுரைகளை வழங்கி அவப்பெயர் ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். வருமானத்திற்கு குறைவிருக்காது. 
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் அனுசரணையுடன் நடந்து கொள்வீர்கள். உங்களின் கோரிக்கைகள் நிறைவேற கடின உழைப்பு அவசியம். 

வியாபாரிகளிடம் கூட்டாளிகள் உதவிகரமாக இருப்பார்கள். சிறுதடைகள் ஏற்பட்டாலும் அவற்றைச் சமாளிக்கும் தைரியத்தைப் பெறுவீர்கள். விவசாயிகள் உறுதியுடன் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். மகசூல் அதிகரிக்கும்.

ADVERTISEMENT

அரசியல்வாதிகளின் பொதுச் சேவையில் அனுகூலமான திருப்பங்கள் ஏற்படும். அதோடு தொண்டர்களின் அன்பும் தொடரும். கலைத்துறையினருக்கு பண வரவுக்குக் குறைவு இராது. திறமைக்குத் தகுந்த புதிய ஒப்பந்தங்களும் செய்வீர்கள்.

பெண்மணிகள் மனதில் காரணமில்லாத பயம் சூழும். குடும்பத்தினருடன் குல தெய்வவழிபாடு நடத்துவீர்கள். மாணவமணிகள் தங்கள் படிப்பில் தடங்கல் ஏற்படாதிருக்க பெற்றோர், ஆசிரியர் வழிகாட்டுதலின்படி நடக்கவும்.

பரிகாரம்: துர்க்கை அம்மனை வழிபட்டு வரவும். 

அனுகூலமான  தினங்கள்:  26, 27. 

சந்திராஷ்டமம்: இல்லை.

******

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

தொடர்ந்து இருந்து கொண்டிருந்த பொருளாதாரப் பிரச்னைகள் நீங்கி கவலை அற்று மகிழ்ச்சியில் திளைப்பீர்கள். அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாகும். தடையைக் கடந்து உங்கள் செயல்களில் வெற்றி பெறுவீர்கள். 

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களின் அலட்சியத் தன்மையை பொருட்படுத்தாது அவர்களிடத்தில் சுமுகமாகப் பழகுங்கள். அலுவலக வேலைகளைப் பதற்றமில்லாமல் செய்து முடிக்கவும். வியாபாரிகள் கூட்டாளிகளிடம் எச்சரிக்கை தேவை. புதிய முயற்சிகளில் வெற்றி பெற்றாலும் சற்று கவனமாக இருக்கவும். விவசாயிகளுக்கு பழைய கடன்கள் வசூலாகும். பாசன முறையில் புதிய மாற்றம் தென்படும்.

அரசியல்வாதிகள் சிலருக்குக் கட்சியில் புதிய பதவிகள் கிடைக்கும். அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். கலைத்துறையினர் செலவு செய்யும் நேரத்தில் கவனம் தேவை. சக கலைஞர்கள் மூலம் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பெண்மணிகள் கணவரிடம் பாசத்தோடு பழகுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியைக் காண்பீர்கள். மாணவமணிகளுக்கு உடல் நலம் நன்றாக இருக்கும். ஆன்மிகத்தில் ஈடுபடவும்.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான  தினங்கள்: 26, 28. 

சந்திராஷ்டமம்: இல்லை.

******

மிதுனம் (மிருகசீரிஷம் 3}ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

கவனத்துடன் நிதானமாகப் பேசி உங்களின் காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். செய்தொழிலில் ஈடுபாடு உண்டாகும். போட்டிகளைச் சாதுர்யமாகப் பேசி சமாளிப்பீர்கள். பொருளாதார நிலை சற்று இறக்கமாகவே இருக்கும்.  

உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளில் தீவிரமாக ஈடுபடுவீர்கள். இதனால் மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். வியாபாரிகள் போக்குவரத்து 
சாதனங்களை விற்பதினால் நல்ல லாபம் கிட்டும். 

வருமானத்தால் மனம் திருப்தியடையும்.  விவசாயிகள் கால்நடைகளால் லாபம் ஈட்டுவீர்கள். கவனத்துடன் செயல்பட 
வேண்டிய காலமிது.

அரசியல்வாதிகள் சொல்லுக்கு நல்ல மதிப்பும், மரியாதையும் ஏற்படும். ஆனாலும் கட்சி மேலிடத்திடம் கவனம் தேவை. கலைத்துறையினர் சக கலைஞர்களின் உதவியினால் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். வருமானம் சற்று குறைவுதான். 

பெண்மணிகளுக்கு பொருளாதார நிலை சீராகவே தொடரும். உற்றார் உறவினர்களால் நன்மை உண்டாகும். மாணவமணிகள் உற்சாகத்துடன் பாடங்களைப் படிக்கவும். ஓய்வு எடுப்பதைக் குறைத்துக் கொண்டு பாடங்களை மனப்பாடம் செய்து மதிப்பெண்களைப் பெறவும்.

பரிகாரம்: சனீஸ்வர பகவானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான  தினங்கள்:  27, 01. 

சந்திராஷ்டமம்: இல்லை.

******

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

வெளியிலிருந்து இனிய செய்திகள் வந்து சேரும். சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். சகோதர, சகோதரிகளிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். மருத்துவச் செலவுகள் ஏற்படும். உங்கள் செயல்களில் முன்னேற்றம் ஏற்படும்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகம் தொடர்பாக வெளியூர் செல்ல நேரிடும். அலுவலக வேலைகள் சுமுகமாக முடியும். வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கலில் லாபம் கிட்டும். புதிய வழிகளில் வருமானத்தைப் பெருக்க முயற்சி செய்வீர்கள். விவசாயிகளுக்கு மாற்றுப் பயிர்களை உற்பத்தி செய்வதன் மூலம் மேலும் லாபத்தை அள்ளலாம். நல்ல மகசூல் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் அரசு அதிகாரிகளின் அலட்சியப் போக்கிற்கு ஆளாகாமல் பொறுப்புடன் நடந்து கொளளவும். கலைத்துறையினருக்கு பண வரவு சரளமாக இருக்கும். புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். 
பெண்மணிகள் கணவரின் உடல் நலத்தில் கவனம் கொள்க. உங்களைத் தேடி மகிழ்ச்சியான செய்திகள் வரும். மாணவமணிகள் உள்ளரங்கு விளையாட்டுகளில் மட்டும் ஈடுபடவும். பாதுகாப்புடன் பயணம் செய்வது அவசியம். வெளிநாட்டுக் கல்வித் தொடர்பாக நல்ல செய்தி கிடைக்கும்.

பரிகாரம்: ஸ்ரீமஹாலட்சுமியை வழிபட்டு வரவும். 
அனுகூலமான  தினங்கள்: 01, 02. 
சந்திராஷ்டமம்: இல்லை.

******

சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

சுய முயற்சியால் முன்னேற்றமடைவீர்கள். எவருடைய கட்டாயத்துக்காகவும் உங்களின் கொள்கைகளை மாற்றிக் கொள்ள மாட்டீர்கள். அரசு வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நன்றாகத் திட்டமிட்டு செயல்படுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகள் பாராட்டும் வகையில் நடப்பீர்கள். பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகளுக்கு நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். கடுமையாக உழைப்பீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் லாபம் அதிகரிக்கும். கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் மீது கட்சி மேலிடம் கவனம் செலுத்தும். புதிய யுக்தியுடன் கட்சிப் பணிகளைச் செய்வீர்கள். கலைத்துறையினர் புதிய படைப்புகளை உருவாக்குவதில் முனைப்புடன் செயல்படுவீர்கள். புதிய நண்பர்களால் பயனடைவீர்கள். 

பெண்மணிகள் அனைவரையும் அனுசரித்து நடந்து கொள்ளவும். பணவரவு சீராக இருக்கும். உடல் நிலையில் அக்கறை தேவை. மாணவமணிகள் பலமுறை படித்து மனப்பாடம் செய்து தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெற முயற்சி செய்யவும். படிப்பில் அதிக கவனம் செலுத்தவும்.

பரிகாரம்: குரு தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வரவும். 
அனுகூலமான  தினங்கள்:  01, 03. 
சந்திராஷ்டமம்: இல்லை.

******

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

கொடுத்த வாக்கை எப்பாடு பட்டாவது காப்பாற்றி விடுவீர்கள். உங்களின் கடமைகளை சரியாகச் செய்வீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். சகோதர, சகோதரிகளிடம் எதிர்பார்த்த உதவிகளைப் பெற முடியாமல் போகும்.

உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். நண்பர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளவும். வியாபாரிகள் வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக சில மாற்றங்களைச் செய்வீர்கள். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். விவசாயிகள் உங்களுக்குக் கீழ் வேலை செய்யும் விவசாயக் கூலிகளை அனுசரித்து நடந்து கொள்ளவும். நல்ல விளைச்சலைக் காண்பீர்கள்.

அரசியல்வாதிகள் கட்சியில் பதவிகளை எதிர்பார்த்து காத்திருப்பீர்கள். தொண்டர்களை அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். கலைத்துறையினர் ரசிகர் மன்றங்களுக்குச் செலவு செய்வீர்கள். திறமைக்குத் தகுந்த வளர்ச்சியைக் காண்பீர்கள். 

பெண்மணிகள் அனைத்துப் பிரச்னைகளையும் நிதானமாக எதிர்கொள்வீர்கள். கணவரிடம் அன்பும், ஆதரவையும் காண்பீர்கள். மாணவமணிகள் ஆசிரியர் வழிகாட்டுதலின்படி நடந்து, படிப்பில் கவனம் செலுத்துவீர்கள்.

பரிகாரம்: நந்தீஸ்வரரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான  தினங்கள்:  27, 02. 

சந்திராஷ்டமம்: இல்லை.
 

******

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

நண்பர்களும், கூட்டாளிகளும் உங்களுக்கு உதவிகரமாக, இருப்பார்கள். சிலர் புதிய வீட்டுக்கு மாறவும் செய்வார்கள். உங்களின் தனித்தன்மை வெளிப்படும். ஆச்சரியமான விஷயங்களைக் கேட்பீர்கள். 

உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இடமாற்றத்தைப் பெறுவீர்கள். வேலையில் சற்று தொய்வு ஏற்பட்டாலும் திட்டமிட்ட வேலைகளைத் தடையில்லாமல் முடித்து விடுவீர்கள். வியாபாரிகள் சிறு முதலீடுகளைச் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். நல்ல லாபம் கிடைக்கும். விவசாயிகள் உழைப்பால் முன்னேறுவீர்கள். நல்ல மகசூல் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் புதிய முயற்சிகளை வெற்றிகரமாக செயல்படுத்துவீர்கள். செல்வாக்கு அதிகரிக்கும். கலைத்துறையினர் செயல்களைச் செய்து முடிப்பதில் கவனமாக இருக்கவும். திறமைகளை வளர்த்துக் கொள்ளவும். 

பெண்மணிகள் ஆடை, அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் அமைதியையும், ஒற்றுமையும் காண்பீர்கள். மாணவமணிகளுக்கு சக மாணவர்கள் மற்றும் பெற்றோரின் ஒத்துழைப்பு கிடைக்கும். அறிவியல் கல்வியால் அதிக மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

பரிகாரம்: ஸ்ரீலட்சுமி நரசிம்மரை வழிபட்டு வரவும். அனுகூலமான  தினங்கள்: 01, 04. சந்திராஷ்டமம்: இல்லை.

******

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

தேக ஆரோக்கியம் சீராக இருக்கும். ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவீர்கள். அலைச்சல்கள் குறையும். சோதனைகள் மறையும். ஆனாலும் பொருளாதார நிலை சுமாராகவே இருக்கும். எனவே எவருக்கும் கடன் தர வேண்டாம்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் நற்பெயர் வாங்குவீர்கள். எதிர்பாராத பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகள் கொடுக்கல், வாங்கலில் சிறப்புகளைக் காண்பார்கள். கூட்டு வியாபாரம் இல்லாது தனித்தே வியாபாரம் செய்யவும். விவசாயிகள் கழனிகளை வாங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். அதிகமாக உழைத்து நல்ல லாபம் ஈட்டுவீர்கள். 

அரசியல்வாதிகளின் புகழும், செல்வாக்கும் உயரும். மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்துவீர்கள். கலைத்துறையினருக்கு திறமைக்கு மதிப்பும், அங்கீகாரமும் கிடைக்கும். கூடவே நல்ல வருமானமும் கூடி வரும் நேரமிது. 

பெண்மணிகள் கணவர் வீட்டாருடன் வாக்கு வாதங்களைத் தவிர்க்கவும். அண்டை அயலாருடன் சுமுக உறவு முறை நீடிக்கும். மாணவமணிகள் படிப்பில் அதிக கவனத்துடன் ஈடுபடவும். வெளி விளையாட்டின்போது பாதுகாப்பு தேவை.

பரிகாரம்: கந்தன்குடி முருகப் பெருமானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான  தினங்கள்:  28, 04. 

சந்திராஷ்டமம்: இல்லை.
 

******

தனுசு(மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

உங்களின் தோற்றத்தில் மிடுக்கு உண்டாகும். வருமானம் நன்றாக இருக்கும். உங்களின் திறமையைக் குறைத்து எடைபோட்ட கூட்டாளிகள் ஆச்சரியப்படும் அளவுக்கு செயலாற்றுவீர்கள். வருமானம் நன்றாக இருக்கும்.

உத்தியோகஸ்தர்கள் சீராகப் பணியாற்றுவீர்கள். வேலையில் ஏற்பட்ட முட்டுக்கட்டைகள் விலகும். வியாபாரிகளுக்கு தொழிலில் புதிய திருப்பங்கள் ஏற்படும். வழக்குகள் சாதகமாக முடியும். விவசாயிகள் தரமான விதைகளை வாங்கி மகசூலை இருமடங்காக்கும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். கூடுதல் விளைச்சலைக் காண்பீர்கள். 

அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தால் பாராட்டப்படுவீர்கள். தொண்டர்களின் ஆதரவினால் செயற்கரிய சாதனைகளைச் செய்வீர்கள். பெயரும், புகழும் உயரும். கலைத்துறையினரின் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். புதிய வடிவத்தில் மக்களிடம் படைப்புகளைக் கொண்டு சென்று பாராட்டுகளைப் பெறுவீர்கள். 

பெண்மணிகளுக்கு வருமானம் இரட்டிப்பாகும். பூர்வீகச் சொத்துகளினால் ஆதாயம் ஏற்படும். மாணவமணிகள் பெற்றோரிடம் புதிய கோரிக்கைகளை எடுத்துச் செல்ல வேண்டாம். படிப்பில் கவனம் செலுத்தவும்.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான  தினங்கள்:  27, 02. 

சந்திராஷ்டமம்: 26.

******

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

செலவுகள் அதிகரிக்கும். வழக்குகள் சாதகமாக அமையும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். எவருக்கும் முன்ஜாமீன் போடக்கூடாது. கொடுக்கல் வாங்கலில் சற்று ஆதாயம் கிடைக்கும். தொழிலில் வளர்ச்சியைக் காண்பீர்கள்.

உத்தியோகஸ்தர்களிடம் மேலதிகாரிகளும், சக ஊழியர்களும் நட்புடன் பழகுவார்கள். உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும். வியாபாரிகள் வாடிக்கையாளர்களுக்கு நல்ல தரமான பொருள்களைக் கொடுத்து வாடிக்கையாளர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். பணவரவும் சரளமாக இருக்கும். விவசாயிகளுக்கு சொத்துத் தகராறு போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் கவனம்தேவை. திட்டமிட்ட பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவேறும்.

அரசியல்வாதிகளுக்கு கட்சி மேலிடத்தின் ஆதரவு குறைவாகவே இருப்பதால் அனைவரையும் அனுசரித்துச் செல்லவும். கலைத்துறையினருக்கு பயணங்களால் அனுகூலம் உண்டாகும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். 

பெண்மணிகளின் செயல்பாடுகளை அனைவரும் பாராட்டுவார்கள். மாணவமணிகளுக்கு படிப்பில மிகுந்த ஆர்வம் உண்டாகும். விடியற்காலை எழுந்திருந்து பாடங்களை மனப்பாடம் செய்வீர்கள். 

பரிகாரம்: ஐயப்ப சுவாமியை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 02, 03. 

சந்திராஷ்டமம்: 27, 28.
 

******

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

புதிய சொத்துகளை வாங்குவீர்கள். வெளிநாடு செல்ல யோகமும், வாய்ப்பும் கிட்டும். சுப நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து நடந்தேறும். புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியமும் கிட்டும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். 

உத்தியோகஸ்தர்களுக்கு வரவேண்டிய பணம் வந்து சேரும். அலுவலக சூழல் சாதகமாகவே இருக்கும். வியாபாரிகள் புதிய முதலீடுகளில் எச்சரிக்கையுடன் ஈடுபடவும். முயற்சிக்குத் தகுந்த லாபத்தைப் பெறுவீர்கள். விவசாயிகள் புதிய உபகரணங்களை வாங்கி லாபத்தைப் பெருக்குவீர்கள். கால்நடை பராமரிப்புச் செலவு சற்று கூடும். மகசூல் பெருகும்.

அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். கட்சிப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். கலைத்துறையினருக்கு சமூகத்தில் பெயரும், புகழும் உண்டாகும். பெண்மணிகளுக்கு குழந்தைகளால் எந்தப் பிரச்னையும் உண்டாகாது. குடும்ப ஒற்றுமையைப் பேணிக் காப்பதில் சிரமப்படுவீர்கள். 

மாணவமணிகள் வெளி விளையாட்டுகளில் கவனத்துடன் ஈடுபடவும். படிப்பில் அதிக கவனம் செலுத்துவீர்கள்.

பரிகாரம்: ஸ்ரீகாஞ்சி காமாட்சி அம்மனை வழிபட்டு வரவும். 

அனுகூலமான  தினங்கள்: 03, 04. 

சந்திராஷ்டமம்: 01, 02.

******

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

நல்லவர்களின் நட்பால் பலம் பெறுவீர்கள். பணவரவு நன்றாக இருக்கும். நெடுநாளைய உடல் உபாதையிலிருந்து விடுபட்டு விடுவீர்கள். புதிய வாகனம் வாங்கும் மோகம் உண்டாகும். உங்களின் தன்னம்பிக்கை உயரும்.

உத்தியோகஸ்தர்கள் கவனமாக வேலைகளைச் செய்யவும். உங்கள் செயல்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். வியாபாரிகள் வியாபாரத்தை விரிவு படுத்தும் நோக்கத்தோடு புதிய கிளைகளைத் திறப்பீர்கள். வியாபாரம் செழிப்பாகும். விவசாயிகள் குத்தகை பாக்கிகளைத் திருப்பிச் செலுத்துவீர்கள். கூடுதல் விளைச்சலைக் காண்பீர்கள். புதிய வகை விதைகளை வாங்கிப் பயிரிடுவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு கட்சியில் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். பேசும் வார்த்தைகளில் கவனத்துடன் இருக்கவும். கலைத்துறையினரின் செல்வாக்கு உயரும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். 

பெண்மணிகளுக்கு குடும்பத்தில் அந்தஸ்து உயரும். ஆடை, அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவமணிகள் தடைகளைத் தகர்த்தெறிந்து இறுதியில் வெற்றியடைவீர்கள். மதிப்பெண்கள் உயரும். 

பரிகாரம்: பிள்ளையார்பட்டி விநாயகரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான  தினங்கள்:  28, 02. 

சந்திராஷ்டமம்: 03, 04. 
 

Tags : வாரப் பலன்கள் weekly predictions
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT