கட்டுரைகள்

எனக்கு எப்போது தான் திருமணம் நடக்கும்?

ஜோதிடர் தையூர். சி. வே. லோகநாதன்

ஜோதிடத்தால், எதையும் அடித்துச் சொல்ல முடியாது. அறுதியிட்டுச் சொல்ல முடியாது. ஆகலாம், கிடைக்கலாம் என்று கோடிட்டுத்தான் சொல்லலாம்.

(ஒரு சில சமயம், ஒரு சிலருக்கு அவர் தம் ஜாதகம் கண்டு ஜோதிடர் சொல்வது அப்படியே நடக்க வாய்ப்பு) ஜோதிடருக்கான அல்லது ஜோதிடம் தெரிந்தவருக்கான 

அனுமதி அவ்வளவுதான். அடித்துச் சொல்ல ஒரே ஒருவன் தான் இருக்கிறான். அவன் பெயர் "இறைவன்".

திருமணம் சரியான நேரத்தில் / காலத்தில் / வயதில் - நடக்காமல் போக காரணம் நிறைய உள்ளது. அதில் சில தோஷங்களும் அடக்கம். பித்ரு தோஷம், ப்ரஹ்மஹத்தி தோஷம், புணர்ப்பு  தோஷம், குலதெய்வ சாபம், காலசர்ப்ப தோஷம் போன்ற நிறைய உள்ளது. இவைகளுக்கான பரிகாரம் செய்த பின்னரும் சிலருக்கு திருமணம் ஆகாத நிலை தொடர்கிறது.

அதனை தெரிவுபடுத்துவதே இந்த கட்டுரையின் நோக்கம். தோஷத்தின் நிலையை அறிந்து கூறிய உடன், நிறைய பேர் அதனைப் பரிகாரத்தின் வாயிலாக நீக்க உடனடியாகவோ, சிறிது காலதாமதத்தாலோ நிறைவேற்றுகின்றனர். ஆனால் இங்கு அறியவேண்டிய முக்கியமானது ஒன்று உண்டென்றால் அதுதான் பரிகாரம் செய்யும் காலம். இதனைத் தனி ஒரு கட்டுரையில் காண்போம்.

எனக்கு எப்போது தான் திருமணம் நடக்கும்? என்பதற்கு, ஜோதிடம் சொல்வதை தற்போது அறியலாம்.

1. ஒருவர் ஜாதகத்தில், குரு பலம் பெறும் போது திருமணம் நடைபெறலாம்.

குரு பலம் என்பது என்ன?    

குரு தனித்து உச்சம் (கடகத்தில்) இருப்பதினாலா அல்லது தனுசு, மீனம் ராசியில் ஆட்சி செய்வதினாலா... இதில் எதுவுமே இல்லை எனலாம்.

கோச்சார ரீதியாக லக்கனத்திற்கோ அல்லது ராசிக்கோ , குருவானவர் 2 , 5, 7, 9 , 11 ஆம் இடங்களில் குரு வருவதால் மட்டுமே குரு பலம் என அழைக்கலாம். அப்போது, அப்படிப்பட்ட நிலையில் உள்ள ஜாதகத்தை கொண்டவருக்கு திருமணத்திற்கான அருமையான காலம் எனக் கூறலாம். அதுவும் குருவானவர் 12 வருடத்திற்கு ஒரு முறை, ஒரு ராசிக்கு திரும்பவும் வருவதால், திருமண வயதில் உள்ளவர்களுக்கு மட்டும், இதனை காணுவது நல்லது, சரியானது, முறையானது ஆகும். 

கீழ்வரும் கட்டத்தில் இதனைத் தெள்ளத்தெளிவாக அறியமுடியும்.

உதாரணத்திற்கு கீழே ஒரு ஜாதக கட்டம் அளித்துள்ளேன். நிஜத்தில் இதுபோன்று ஒரு சிலருக்கு தான் ராசியும், லக்கினமும் ஒன்றாக வரும். அப்படி வராதவர்கள், அவர்கள் ஜாதகத்தில் லக்கினத்திலிருந்தும், ராசியில் இருந்தும் மேற்சொன்ன ஜோதிட விதியை அதாவது 2, 5, 7,9, 11ஆம் இடங்களில் குரு வரும்போது, குரு பலம் அதாவது திருமணத்திற்கான காலம் என அறிக. 

2. சர்வாஷ்டக வர்க்கம் மூலமாகவும் திருமண காலம்  அறியலாம். 

A. ஒருவர் ஜாதகத்தில், களத்திர காரகரான, சுக்கிரன் அமர்ந்திருக்கும் இடத்தில் எத்தனை பரல்கள் உள்ளதோ, அந்த வயதில் ஜாதகருக்கு திருமணம் நடைபெறலாம். அல்லது மணவாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும் சூழல் ஏற்படலாம்.

B. சர்வாஷ்ட வர்க்க பரல்களை, லக்கினம் முதல் லக்கினத்திற்கு 7ஆம் வீடு வரையிலான பரல்கள் கூட்டுத் தொகையை, 27ஆல் வகுத்து (27 நக்ஷ்த்திரம் ) மீதி வரும் "எண்ணுக்கு உரிய நட்சத்திரத்தை" பெண் ஜாதகர்  என்றால் குருவும், ஆண்   என்றால் சுக்கிரனும் தொடும் போது / கடக்கும் போது திருமணம் நடந்தேறும்.

3. பொதுவாக லக்கினத்திற்கு 2ஆம் இடம் குடும்ப ஸ்தானம் ஆகும். 7 ஆம் இடம் களத்திர ஸ்தானம் ஆகும். அதாவது வரப்போகும் கணவர் / மனைவி பற்றிய குறிப்பை தரும் ஸ்தானம். 11ஆம் இடம் லாபஸ்தானம். இது அனைத்து விதமான ஜாதகர் பெறும் லாபத்தைப் பற்றிக் கூறுவதாகும். திருமணம் நடந்தேறுவது பற்றிய தகவலைத் தருவதாகும். இந்த மூன்று வீடுகளின் (2,7,11) அதிபதிகளின் தசா , புத்தி காலங்களில் திருமணம் நடைபெறும்.

4. ராசி கட்டத்தில் உள்ள லக்கின அதிபதி, நவாம்சத்தில் எந்த ராசியில் இருக்கிறாரோ அந்த ராசிக்கு, கோச்சார குரு வரும்போது அல்லது அந்த ராசியை குருவின் பார்வைகளான 5, 7, 9 ஆம் பார்வைகளால் பார்க்கும் போது திருமணம் நடக்கும். 

எப்போது திருமணம் மறுக்கப்படும்?

அஷ்டவர்க்கப்படி, 7 ஆம் வீட்டில் பெற்ற பரல்கள், 7 ஆம் அதிபதி நிற்கும் வீட்டில் பெற்ற பரல்கள், களத்திர காரகன் சுக்கிரன் நின்ற வீட்டில் பெற்ற பரல்கள் இவை அனைத்தும் பார்த்துத்தான் சொல்ல முடியும். சராசரியாக ஒரு வீட்டில் பெறவேண்டிய பரல்களான 28க்கு மிகக் குறைவான பரல்களை மேற்சொன்ன வீடுகளில் ஒன்றோ அல்லது மூன்றுமோ பெற்றிருப்பின், திருமணம் மறுக்கப்பட்ட ஜாதகம் என அறியலாம்.

உதாரண ஜாதகத்தைப் பார்க்கலாம்.

கன்னி லக்கினம், 7ஆம் இடம் வரப்போகும் வரனின் அமைப்பு (கணவர் / மனைவி) பற்றி கூறுவது, லக்கினத்திற்கு 7ல் அதன் அதிபதியான குரு இருக்கிறார். களத்திர காரகரான சுக்கிரன் உச்சம் பெற்று இருக்கிறார். களத்திரகாரகர், களத்திர ஸ்தானத்தில் இருப்பது நல்லதல்ல. அந்த பாவம் நாசம் அடையும். அதனை விட மிக முக்கியமான ஞான காரகரான கேது இந்த 7 ஆம் இடத்தில் இருப்பது நல்லதல்ல. இவர் திருமண பாக்கியத்தைக் கெடுப்பார். உடனிருந்தே கெடுப்பார்.

தற்போது சர்வாஷ்டக வர்க்கம் படி பலனைக் காணலாம். முதலில் 7ஆம் வீட்டில் பெற்ற பரல்கள் 15, 7ஆம் அதிபதி குரு இருக்கும் வீட்டில் பெற்ற பரல்கள் 15. அதே வீட்டில் தான் களத்திரகாரகர் சுக்கிரனும் இருப்பதால், அவர் இருக்கும் வீட்டில் பெற்ற பரல்கள் 15.  சராசரியாக எல்லா வீடும் / பாவமும் குறைந்தது 28 பரல்கள் பெற்றிருக்க வேண்டும். ஆனால், கிட்டத்தட்டப் பாதி மதிப்பெண்ணான 15 பரல்கள் பெற்றிருப்பதால் பாதி கிணறு தாண்டியதைப் போல் ஆகும். பாதி கிணற்றைத் தாண்டினால் என்ன கதியோ அதுதான் அந்த ஜாதகருக்கு நேர்ந்தது. திருமணமே மறுக்கப்பட்டு, கடைசி வரை திருமணம் பாக்கியம் இல்லாமல் போனது. 

இந்த கட்டுரை, தாமாகவே ஜோதிடம் பற்றி ஓரளவு தெரிந்துகொள்ளவும், திருமணம் பற்றி வெளியில் கேட்கக்கூடத் தயங்கும் சிலருக்காகவே இதனை அளித்துள்ளேன் . 

தொடர்புக்கு : 98407 17857 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT