உள்ளாட்சித் தேர்தல் 2019

புதுக்கோட்டையில் 13 வாக்கு எண்ணும் மையங்கள்!

26th Dec 2019 12:29 PM | -சா. ஜெயப்பிரகாஷ்

ADVERTISEMENT

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் இரு கட்டங்களாக நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் ஜனவரி 2ஆம் தேதி வியாழக்கிழமை 13 இடங்களில் நடைபெறவுள்ளது.

ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஒரு வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

விராலிமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், குன்றாண்டார்கோயில் ஊராட்சி ஒன்றியத்துக்கு கீரனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு புதுப்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியிலும், கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்துக்கு மழையூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு அரசு மகளிர் கல்லூரியிலும் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்துக்கு இலுப்பூர் ஆர்சி மேல்நிலைப் பள்ளியிலும், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியத்துக்கு விவி மேல்நிலைப் பள்ளியிலும், திருமயம் ஊராட்சி ஒன்றியத்துக்கு ஜோசப் பாலிடெக்னிக் கல்லூரியிலும், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு கைக்குறிச்சி பாரதி கல்வியியல் கல்லூரியிலும் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அரிமளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு அரசு மேல்நிலைப் பள்ளியிலும், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்துக்கு அரசு பாலிடெக்னிக் கல்லூரியிலும், மணமேல்குடி ஊராட்சி ஒன்றியத்துக்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், ஆவுடையார்கோயில் ஊராட்சி ஒன்றியத்துக்கு பரமந்தூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியிலும் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க.. வாய்ப்பு கொடுங்கள்.. சாதித்துக் காட்டுகிறேன்.. நாமக்கல்லில் பார்வையற்ற பெண் துணிச்சல் பிரசாரம்

அந்தந்த ஒன்றியங்களுக்கு உள்பட்ட மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர், ஒன்றியக் குழு உறுப்பினர், கிராம ஊராட்சித் தலைவர் மற்றும் கிராம ஊராட்சி உறுப்பினர் பதவியிடங்களுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT