LIVE

பரவும் கரோனா : லைவ் அப்டேட்ஸ்

DIN

கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்.. லைவ் அப்டேட்ஸ்!

இந்தியாவில் 75 லட்சத்தைத் தாண்டியது கரோனா பாதிப்பு

இந்தியாவில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 75 லட்சத்தைத் தாண்டியுள்ளது. 

 

கேரளத்தில் மேலும் 5,022 பேருக்கு கரோனா

 கேரளத்தில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 5,022 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

தில்லியில் மேலும் 2,154 பேருக்கு கரோனா

 தில்லியில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 2,154 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் புதிதாக 3,536 பேருக்கு கரோனா

தமிழகத்தில் புதிதாக 3,536 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (அக். 19, திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

கரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு புதிய சிக்கல்? பெங்களூரு மருத்துவர்கள் கவலை

 கரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு மூளை மந்தம் ஏற்பட்டு ஏராளமானோர் சிகிச்சைக்கு வருவதாக பல்வேறு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விரிவான செய்திக்கு..

மகிழ்ச்சியான செய்தி: ஹரியாணாவில் 4 மாதங்களில் பலியில்லாத முதல் நாள்

 கரோனா பேரிடருக்கு இடையே, மகிழ்ச்சிதரும் வகையில் ஹரியாணா மாநிலத்தில் கடந்த நான்கரை மாதங்களில் முதல் முறையாக ஞாயிற்றுக்கிழமை கரோனாவுக்கு ஒருவரும் பலியாகாத நாளாக மாறியுள்ளது. விரிவான செய்திக்கு..

ரஷியாவில் மேலும் 15,982 ​பேருக்கு தொற்று; பாதிப்பு 14.15 லட்சமாக உயர்வு!

 ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,982 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. மேலும் 179 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். விரிவான செய்திக்கு..

 

சென்னையில் கரோனா பலி 3,500-ஐத் தாண்டியது: மண்டலவாரியாக விவரம்

 சென்னையில் இதுவரை 1,88,944 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டோரில் 3,504 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில் கரோனா பாதிக்கப்பட்டோரில் 1,72,533 பேர் குணமடைந்த நிலையில், தற்போது 12,907 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். விரிவான செய்திக்கு..

கரோனா: ஆந்திரத்தில் 3,986, கர்நாடகத்தில் 7,012 பேருக்கு பாதிப்பு

ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம் மாநிலங்களில் இன்றைய கரோனா பாதிப்பு தொடர்பான விவரங்கள் வெளியாகியுள்ளன. இதன்படி ஆந்திரத்தில் 3,986, கர்நாடகத்தில் 7,012 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

 

தில்லியில் 6 ஆயிரத்தைத் தாண்டியது கரோனா பலி

தலைநகா் தில்லியில் இன்று மேலும் 3,299 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 3 ஆயிரத்துக்கும் கீழ் கரோனா

சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் புதிதாக 2,878 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

தமிழகத்தில் புதிதாக 3,914 பேருக்கு கரோனா

தமிழகத்தில் புதிதாக 3,914 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

ரஷியாவில் புதிதாக 15,000 பேருக்கு கரோனா

ரஷியாவில் புதிதாக 15,099 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

தில்லியில் இன்று புதிதாக 3,259 பேருக்கு கரோனா

தில்லியில் இன்று புதிதாக 3,259 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 

தமிழகத்தில் புதிதாக 4,295 பேருக்கு கரோனா

தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 4,295 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

போலந்து நாட்டில் ஒரேநாளில் 9,622 பேருக்கு கரோனா

போலந்து நாட்டில் ஒரேநாளில் 9,622 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 

ஜெர்மனியில் புதிதாக 7,830 பேருக்கு கரோனா

ஜெர்மனியில் புதிதாக 7,830 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 

கரோனா: கடந்த 24 மணி நேரத்தில் 63,371 பேருக்கு தொற்று உறுதி 

புது தில்லி: நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 73,70,469 ஆக உயர்ந்துள்ளது. தொற்றில் இருந்து 64,53,780 போ் மீண்டுள்ளனா்.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 63,371 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டோா் மொத்த எண்ணிக்கை 73,70,469-ஆக அதிகரித்தது. அதே கால அளவில் 81,514 போ் குணமடைந்தனா். இதனால், கரோனாவில் இருந்து மீண்டு வந்தவா்களின் எண்ணிக்கை  64,53,780-ஆக அதிகரித்தது. அதாவது, 87.56 சதவீதம் போ் குணமடைந்தனா். நாடு முழுவதும் 8,04,528 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இது மொத்த பாதிப்பில் 10.92 சதவீதமாகும்.

வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, கரோனா தொற்றுக்கு மேலும் 895 போ் பலியாகினா். இதனால், நாடு முழுவதும் உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,12,161-ஆக அதிகரித்தது. அதாவது 1.52 சதவீதம் பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்) தகவல்படி, அக்டோபா் 15-ஆம் தேதி வரை 9,22,54,927 கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. வியாழக்கிழமை ஒரே நாளில் மட்டும் 10,28,622  மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குணமடைந்தவர்களின் பட்டியலில் இந்தியா முதலிடம்

 தொற்று பாதித்தவர்களில் அதிகயளவில் குணமடைந்தவர்களின் பட்டியலில் தொடர்ந்து இந்தியா முதலிடத்தில் உள்ளது. நாடு முழுவதும் இதுவரை 64,48,658 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

    
தொற்று பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. அங்கு இதுவரை 82,16,315 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 2,22,717 பேர் உயிரிழந்துள்ளனர். 

நோய்த்தொற்று பாதிப்பில் இந்தியா மற்றும் பிரேசில் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது  இடங்களில் உள்ளது. இந்தியாவில் 73,70,468 பேரும், பிரேசிலில் 51,70,996 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் (1,346,380), அர்ஜென்டினா (949,063), கொலம்பியா (936,982), ஸ்பெயின் (921,374), பெரு (856,951), பிரான்ஸ் (850,997), மெக்சிகோ (834,910) ), தென்னாப்பிரிக்கா (698,184), இங்கிலாந்து (676,455), ஈரான் (517,835), சிலி (486,496), ஈராக் (416,802), பங்களாதேஷ் (384,559), இத்தாலி (381,602) பேர்பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழப்பு பட்டியலில் பிரேசில் 1,52,513 உயிரிழப்புகளுடன் இரண்டாவது இடத்திலும்,  இந்தியா 1,12,161 உயிரிழப்புகளுடன் மூன்றாவது இடத்திலும், 23,491     உயிரிழப்புகளுடன் ரஷ்யா நான்காவது இடத்தில் உள்ளது.

உலக அளவில் கரோனா பாதிப்பு 3.91 கோடி; பலி 11 லட்சத்தைக் கடந்தது

 வாஷிங்டன்: உலக அளவில் கரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 91 லட்சத்து 75 ஆயிரத்து 466 ஆக உயர்ந்துள்ளது என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

உலகம் முழுவதும் 214  நாடுகளுக்கு கரோனா நோய்த்தொற்று பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, உலகம் முழுவதும் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 91 லட்சத்து 75 ஆயிரத்து 466 ஆக உயர்ந்துள்ளது , அதே நேரத்தில் 2,93,78,743 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். 

தற்போதைய நிலவரப்படி, தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 86,93,782 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 70,897 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

தொற்று பாதிப்பால் உலக முழுவதும் இதுவரை 11,02,941 பேர் உயிரிழந்துள்ளனர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 

தொற்று பாதித்தவர்களில் அதிகயளவில் குணமடைந்தவர்களின் பட்டியலில் தொடர்ந்து இந்தியா முதலிடத்தில் உள்ளது. நாடு முழுவதும் இதுவரை 64,48,658 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

கர்நாடகத்தில் இன்று மேலும் 7542 பேருக்கு கரோனா

கர்நாடகத்தில் இன்று மேலும் 7542 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் இன்று மேலும் 7542 பேருக்கு கரோனா

கர்நாடகத்தில் இன்று மேலும் 7542 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மேலும் 4,389 பேருக்கு கரோனா

 தமிழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) புதிதாக 4,389 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

சென்னையில் 1,140 பேருக்கு கரோனா : மாவட்டம் வாரியாக

 சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் புதிதாக 3,249 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (வெள்ளிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

இந்தோனேசியாவில் மேலும் 4,301 பேருக்கு கரோனா தொற்று

இந்தோனேசியாவில் மேலும் 4,301 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 

ஜெர்மனியில் புதிதாக 7,334 பேருக்கு கரோனா

ஜெர்மனியில் புதிதாக 7,334 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

ரஷியாவில் புதிதாக 15,150 ​பேருக்கு கரோனா தொற்று; மேலும் 232 பேர் பலி

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,150 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. மேலும், 232 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். விரிவான செய்திக்கு..

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT