கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்.. லைவ் அப்டேட்ஸ்!
Live Updates
கன்னியாகுமரி எம்.பி. வசந்தகுமார் காலமானார்
கன்னியாகுமரி எம்.பி.யான வசந்தகுமார், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விரிவான செய்திக்கு..
இந்தியாவில் ஒரே நாளில் 77,266 பேருக்கு கரோனா; 1,057 பேர் பலி
இந்த ஆண்டு இறுதிக்குள் கரோனா தடுப்பூசி: டொனால்ட் டிரம்ப்
அமெரிக்காவில் தொற்று பலி 1.84 லட்சத்தைக் கடந்தது
உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு 2.46 கோடி
ஆப்பிரிக்காவில் வெகுவாகக் குறைந்த புதிய பாதிப்பு
மகாராஷ்டிரத்தில் புதிதாக 14,718 பேருக்கு கரோனா; மேலும் 355 பேர் பலி
மகாராஷ்டிரத்தில் இன்று ஒரேநாளில் 14,718 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா: கர்நாடகம், கேரளம் பாதிப்பு விவரம்
கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 9,386 பேர் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் கேரளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,406 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
சென்னையில் 1,286, பிற மாவட்டங்களில் 4,695: மாவட்டவாரியாக பாதிப்பு விவரம்
சென்னையில் இன்று 1,286 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் புதிதாக 4,695 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் புதிதாக 5,981 பேருக்கு தொற்று; பாதிப்பு 4 லட்சத்தைக் கடந்தது!
தமிழகத்தில் புதிதாக 5,981 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று (ஆக. 27, வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது; மேலும் ஒரேநாளில் 109 பேர் உயிரிழந்துள்ளனர். விரிவான செய்திக்கு..
இந்தியாவில் இதுவரை சுமார் 3.9 கோடி கரோனா பரிசோதனைகள்: மத்திய சுகாதாரத்துறை
இந்தியாவில் இதுவரை சுமார் 3.9 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தில்லியில் புதிதாக 1,693 பேருக்கு கரோனா தொற்று
தில்லியில் புதிதாக 1,693 பேருக்கு கரோனா தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
மகாராஷ்டிரத்தில் 15 ஆயிரத்தை நெருங்கியது இன்றைய கரோனா பாதிப்பு
மகாராஷ்டிரம், மும்பை மற்றும் தாராவி கரோனா பாதிப்பு நிலவரங்கள் பற்றிய தரவுகளை அந்த மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
சென்னையில் 1,290, பிற மாவட்டங்களில் 4,668: மாவட்டவாரியாக பாதிப்பு விவரம்
சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் புதிதாக 4,668 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் புதிதாக 5,958 பேருக்கு கரோனா; மேலும் 118 பேர் பலி
தமிழகத்தில் புதிதாக 5,958 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது; மேலும் கரோனா பாதிப்பால் 118 பேர் உயிரிழந்துள்ளனர்.
கோவிஷீல்டு தடுப்பூசி: தமிழகத்தில் பரிசோதிக்க முதல்வர் உத்தரவு
ஆக்ஸ்போர்டு பல்கலை. தயாரித்துள்ள கோவிஷீல்டு என்று பெயரிடப்பட்ட கரோனா தடுப்பூசியை தமிழகத்தில் பரிசோதிக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். விரிவான செய்திக்கு..
ரஷியாவில் புதிதாக 4,676 பேருக்கு கரோனா தொற்று
ரஷியாவில் மேலும் 4,676 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 9,70,865 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..
இந்தியாவில் புதிதாக 67,151 பேருக்கு கரோனா 1,059 பேர் பலி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 67,151 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நாட்டில் இதுவரை கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 32 லட்சமாக உயர்ந்துள்ளது. விரிவான செய்திக்கு..
உலகில் கரோனா வேகம் குறைகிறது: உலக சுகாதார அமைப்பு
ஜெனீவா: தென்கிழக்கு ஆசியா மற்றும் மத்தியதரைக் கடல் பகுதிகளைத் தவிர உலகின் மற்ற பகுதிகளில் கரோனா நோய்த்தொற்று பரவலின் தீவிரம் குறைந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு திங்கள்கிழமை இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று பரவல் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அந்த நோய்த்தொற்று ஏற்படுபவா்களின் எண்ணிக்கையும், அதன் பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எனினும், தென்கிழக்கு ஆசியா, மத்தியதரைக் கடல் பகுதிகளைத் தவிர, உலகின் மற்ற பகுதிகளில் அந்த நோய்த்தொற்று பரவலின் தீவிரம் தணிந்து வருகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்த ஒரு வாரத்தில் மட்டும் 17 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதியானது.
இது, முந்தைய வாரத்தில் புதிதாகக் கண்டறியப்பட்ட தொற்று எண்ணிக்கையைவிட 4 சதவீதம் குறைவாகும்.அந்த காலக்கட்டத்தில், கரோனா நோய் பாதிப்பு காரணமாக 39 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் பலியாகினா்.
இதுவும், முந்தைய வாரத்தோடு ஒப்பிடுகையில் 12 சதவீதம் குறைவாகும்.கரோனா நோய்த்தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட இரண்டாவது பிரதேசமான தென்கிழக்கு ஆசியாவில், உலகின் 15 சதவீத கரோனா உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
கரோனா தடுப்பு மருந்து: சென்னையில் இரு இடங்களில் இறுதிக்கட்ட பரிசோதனை
பிரிட்டனின் ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகம் கண்டறிந்த கரோனா தடுப்பு மருந்தின் இறுதிக்கட்ட பரிசோதனைகள், சென்னையின் இரு வேறு மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட உள்ளன. விரிவான செய்திக்கு..