தொழில்நுட்பம்

வாட்ஸ்ஆப்பில் இனி 2 ஜிபி வரை கோப்புகளை அனுப்பலாம்

தினமணி

புதிய அம்சங்களையும், தொழிநுட்ப வசதிகளையும் அறிமுகப்படுத்தும் வாட்ஸ்ஆப் செயலி அடுத்தகட்டமாக  2 ஜிபி வரையிலான கோப்புகளை அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்த உள்ளது.

இன்றைய காலத்தில், வாட்ஸ்ஆப் செயலியில் கோப்புகளை(files) அனுப்புவது தவிர்க்க முடியாததாக  உள்ளது. புகைப்படங்கள், விடியோக்கள், பிடிஎஃப் கோப்புகள் போன்றவை அதிகம் பரிமாறப்படுகிறது.

இருப்பினும்,  கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 100 எம்பி அளவுள்ள கோப்பு மட்டுமே வாட்ஸ்ஆப்பில் பகிரமுடியும் என்கிற நிலையே நீடிக்கிறது.

இந்நிலையில், விரைவில் இனி ஒரே நேரத்தில் 2 ஜிபி அளவிலான பெரிய கோப்பை  அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாக வாட்ஸ்ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், முதல்கட்டமாக இந்த வசதியை அர்ஜென்டினாவில் சோதனை முயற்சியாக செய்தபின், அனைத்து பயனாளர்களுக்கும் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

வெள்ளை நிலா... சாய் தன்ஷிகா!

"ராகுலோ, மோடியோ! நாங்கள் வரவேற்போம்!": செல்லூர் ராஜூ

SCROLL FOR NEXT