தொழில்நுட்பம்

அனுப்பிய செய்திகளை எடிட் செய்யும் வசதி: வாட்ஸ்ஆப்பில் விரைவில் அறிமுகம்

3rd Jun 2022 12:44 PM

ADVERTISEMENT

 

புதிய அம்சங்களையும், தொழிநுட்ப வசதிகளையும் அறிமுகப்படுத்தும் வாட்ஸ்ஆப் செயலி அடுத்தகட்டமாக அனுப்பிய செய்திகளை(மெசேஜ்களை) எடிட் செய்யும் வசதியை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.

பயனாளர்களின் ஆலோனைகளின்படி வாட்ஸ்ஆப் அடுத்தகட்டமாக நிலைத்தகவலில்(status) ஏதேனும் செய்தி அல்லது இணையப் பக்கத்திற்கான இணைப்பை(லிங்க்) பதிவு செய்யும்போது அதற்கான முன்னோட்டத்தையும்(preview) காணும் வகையில் புதிய வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்திருந்த நிலையில் தற்போது வாட்ஸ்ஆப்பில் அனுப்பிய செய்திகளை(மெசேஜ்களை) எடிட் செய்யும் வசதியை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.

இதன்மூலம் அனுப்பப்படுகிற செய்திகளில் பிழை இருந்தால் அதை நீக்காமலே(டெலிட்) எடிட் மூலம் சரிசெய்துகொள்ளலாம்.

ADVERTISEMENT

முதல்கட்டமாக இந்த வசதி பீட்டா பயனர்களுக்கு வழங்கப்பட்டுவருகிறது. சோதனை முடிந்த, அனைத்து ஆண்ட்ராய்ட் பயனாளர்களுக்கும் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : whats app
ADVERTISEMENT
ADVERTISEMENT