தொழில்நுட்பம்

வாட்ஸ் ஆப்பில் கைரேகை பதிவு செய்யும் அம்சம் விரைவில்..

தினமணி

வாட்ஸ் ஆப்பில் கைரேகை பதிவு செய்யும் அம்சம் விரைவில் வரவுள்ளதாக அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. 

உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வரும் வாட்ஸ் ஆப்பில் அவ்வப்போது பல புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. 

அந்த வகையில், வாட்ஸ் ஆப்பில் பயோமெட்ரிக் ஸ்கேனிங்கைத் தொடர்ந்து மேலும், ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாக ஃபிங்கர்பிரிண்ட்(கைரேகை பதிவு) சேவை அறிமுகமாக உள்ளது. இது பயனர்களின் தரவுகளை பாதுகாக்க அமையும். 

பீட்டா 2.20.200.10 இயங்குதளத்தில் இது சோதனை முயற்சியாக தற்போது உள்ளது. சோதனை முயற்சி வெற்றி பெறும் பட்சத்தில் விரைவில் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் மூலமாக ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்ஆப்பை பயன்படுத்தும்போது, கைரேகையை முதலில் ஸ்கேன் செய்துகொள்ள வேண்டும். பின்னர் ஒவ்வொரு முறை வாட்ஸ் ஆப்பை பயன்படுத்தும்போது கைரேகையை பதிவு செய்து திறக்க வேண்டும். பயனர்கள் மத்தியில் இது வரவேற்பைப் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எதிர்காலத்தில், 3டி ஃபேஸ் அன்லாக் ஆதரவும் வாட்ஸ் ஆப்பில் கொண்டு வரப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

SCROLL FOR NEXT