தமிழ்நாடு

11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

11th May 2023 01:40 PM

ADVERTISEMENT


தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், 

நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 5.30 மணியளவில் மோக்கா புயலாக வலுப்பெற்று இன்று காலை 8.30 மணியளவில் போர்ட் பிளேயரில் இருந்து சுமார் 510 கி.மீ மேற்கு - தென்மேற்கே நிலைகொண்டுள்ளது. 

இது இன்று இரவு மத்திய வங்கக்கடல் பகுதிகளில் தீவிர புயலாக வலுபெறக்கூடும். அதன்பிறகு நாளை காலை முதல் வடக்கு-வடகிழக்கு திசையில் திரும்பி நகர்ந்து மாலை மிகத் தீவிர புயலாக வலுப்பெற்று மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். 

ADVERTISEMENT

மே 11(இன்று) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

நீலகிரி, கோவை, ஈரோடு, தென்காசி, சேலம், நாமக்கல், திருப்பூர், தேனி, திண்டுக்கல், நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கான வானிலை முன்னறிப்பு

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கு..

மே 11, 12-ல் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்திலும் இடையிடையே 70 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். 

மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 


 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT