செய்திகள்

மூளைக்குத் தேவையானவை உங்கள் உணவில் இருக்கிறதா?

2nd Feb 2023 05:40 PM

ADVERTISEMENT


மூளையை புத்துணர்ச்சியுடன் வேலை செய்ய வைக்கும் உணவுபொருள்கள் நிச்சயம் உங்கள் உணவில் இருக்க வேண்டியது அவசியம். இது வெகுநாள் செயல்பாடுகளுக்கு மிகவும் அத்தியாவசியமாக அமையும்.

மூளைக்கு ஊக்கமளிக்கும் உணவுகளை சாப்பிடும்போது மூளையின் செயல்திறனில் நல்ல மாற்றம் தெரியும். மூளையின் செயல்திறனை அதிகரிப்பதோடு, மிகச் சிறப்பான செயல்பாடுகள் மூலமாகவும் அதனை உணர முடியும்.

எப்படி நமது உடலுக்குத் தேவையான ஆரோக்கியமான உணவுகளை நாம் சாப்பிடுகிறோமோ அதுபோல மூளையின் செயல்திறனை ஊக்கப்படுத்தும் உணவுகளையும் தேர்வு செய்து சாப்பிட வேண்டியது கட்டாயமும் கூட.

நாம் அன்றாடம் சாப்பிடும் உணவு வகைகளில் கோதுமை மற்றும் முட்டைக்கு மூளையை சுறுசுறுப்பாக உதவும் லெசிதின் அதிகளவில் இருக்கிறது. 

ADVERTISEMENT

பழங்கள் என்று எடுத்துக் கொண்டால் அவகோடா, ஆரஞ்சு பழங்களை அதிகம் சாப்பிடலாம். இவை சோலின் அதிகம் கொண்டவை. இதுவும் மூளையின் நரம்பு மண்டலத்துக்கு பலம் சேர்க்கும். 

மூளைக்கு சற்று ஓய்வு அளிக்கவும், நிம்மதியான உறக்கத்துக்கும் சீமை சாமந்தி சேர்த்த தேநீர் அருந்தலாம்.
 

Tags : food Brain
ADVERTISEMENT
ADVERTISEMENT