செய்திகள்

வாழ்க்கைத் துணை உங்களை அதிகம் நேசிப்பதற்கு இதுதான் அறிகுறி

22nd Sep 2022 01:03 PM

ADVERTISEMENT


வாழ்க்கைத் துணை... இது பற்றி பலருக்கும் பல எண்ணங்களும் விருப்பங்களும் ஏன் குழப்பங்களும் இருக்கும். நமது வாழ்க்கைத் துணை சிறப்பாக அமைந்திருக்கிறதா என்பதிலேயே பலருக்கும் புரிதல்கள் இல்லாமல் கூட இருக்கலாம். 

குறையை மட்டுமே பார்ப்பவர்களுக்கு எப்படிப்பட்டவர் வாழ்க்கைத் துணையாக அமைந்தாலும் அது சரிபட்டு வராதுதான். கிடைத்த வாழ்க்கையை சொர்க்கமாக மாற்றிக் கொள்ள தெரிந்தவர்களுக்கு வாழ்க்கையே சொர்க்கம்தான்.

இதையும் படிக்க | ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்திருப்பவர்கள் கவனிக்க..

அந்த வகையில், முதலில் உங்கள் வாழ்க்கைத் துணை உங்களை விரும்புகிறாரா? உங்களை அதிகம் நேசிக்கிறாரா? நன்கு புரிந்து வைத்திருக்கிறாரா? என்றெல்லாம் உங்களுக்கு இருக்கும் குழப்பங்களைத் தீர்த்து வைக்கவே இந்த தகவல்.

ADVERTISEMENT

அதாவது, உங்கள் வாழ்க்கைத் துணை, உங்களை அதிகம் நேசிப்பதற்கு இந்த சில விஷயங்கள்தான் முக்கிய அறிகுறி..

அதாவது, நீங்கள் காலையில் இருந்து இரவு வரை உங்கள் நாளில் நடக்கும் அல்லது வாழ்க்கையில் நடந்த விஷயங்களை அவருடன் பகிர்ந்து கொள்ளும் போது, மிகவும் பொறுமையாக அவர் அதனை காது கொடுத்துக் கேட்கிறாரா? என்பதைப் பாருங்கள். அவ்வாறு அவரது காதை உங்கள் பேச்சுக்காக கொடுக்கிறார் என்றால் அவர் கண்டபடி உங்களைக் காதலிக்கிறார் என்று அர்த்தம்.

மன்னிப்பு.. 

தமிழில் பிடிக்காத வார்த்தையாக இருந்தாலும் நீங்கள் குறிப்பாக நீங்கள் எதாவது தவறு செய்துவிட்டாலும், அதனைப் பெரிதுப்படுத்தாமல் நீங்கள் மன்னிப்பே கேட்காவிட்டாலும் மன்னித்துவிடுகிறாரா? அப்புறம் என்னங்க இது காதலின் முக்கிய அறிகுறிதானே.

உங்களுக்குப் பிடித்ததெல்லாம்..
கொசு அடிப்பது கூட உங்களுக்குப் பிடித்த விஷயமாக இருக்கலாம். ஆனால் அதை நக்கல் செய்யாமல், உங்களுக்குப் பிடித்ததெல்லாம் அவருக்கும் பிடித்தது என்று மாறுகிறாரா? உங்களுக்குப் பிடித்த விஷயங்களைத் தேடிப் பிடித்து வாங்கித் தருகிறாரா? உங்களுக்குப் பாட்டுப் பிடிக்கும் என்றால், பாட்டுக் கேட்க அவரும் முயல்கிறாரா? உங்களுக்கு ஆக்ஷன் படம் பிடிக்கும் என்றால் உங்களுடன் முகம் சுளிக்காமல் படம் பார்க்கிறாரா? அதுவும் காதல் வசப்பட்ட அறிகுறிதான்.

இது சொல்லவே வேண்டியதில்லை


எப்போதாவது, எந்த சிறப்பான நாளும் இல்லாத நாள்களில் கூட உங்களுக்காக பூவோ அல்லது பரிசுப் பொருளோ வாங்கிக் கொண்டு வந்து உங்களை ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் துள்ள வைக்கிறாரா.. அது உண்மையில் உங்கள் மீதிருக்கும் அன்புக்கும் காதலுக்கும் முக்கிய சாட்சியாகிறது.

அவர் தனது உணர்வுகளை, அன்பை, காதலை உங்களிடம் தெரியப்படுத்துகிறார் என்றாலும் அதுவும் ஆழ்ந்த அன்பைத்தான் சொல்கிறது என்று புரிந்து கொள்ளுங்கள்.

அதே மன்னிப்பு...


அவர் தெரியாமல் செய்த தவறுக்கும், நீங்கள் மனம் வருந்துகிறீர்கள் என்று தெரிந்தாலோ அல்லது மனம் வருந்தியிருப்பீர்கள் என்று தெரிந்தாலோ அதற்கான உங்களிடம் மன்னிப்புக் கேட்டால், நினைவில் கொள்ளுங்கள், உங்களுக்கு கிடைத்திருக்கும் லைஃப் பார்ட்னர் மிகச் சிறந்த வாழ்க்கைத் துணை என்பதை.

மதிப்பது..

உங்களை மட்டுமல்ல, உங்கள் வேலையை, உங்கள் குடும்பத்தாரை மதிக்கிறார் என்றால், அதுவும் உங்கள் மீதிருக்கும் காதலைத்தான் சொல்கிறது என்பதை பலரும் புரிந்து கொள்வதேயில்லை. இனி நிச்சயம் புரிந்து கொள்வீர்கள்.

புகழ்ச்சி

பலரும் நிறைந்திருக்கும் ஓரிடத்தில் உங்களைப் பற்றி அவர் ஏதேனும் ஒரு விஷயத்தைக் கூறி புகழ்கிறார் என்றால், அது மிகப்பெரிய விஷயம். அதற்குக் காரணம், அவர் உங்களின் செயல்களால் மனதளவில் மகிழ்கிறார், அதனை வெளிப்படுத்தவும் தயங்குவதில்லை என்பதும் தான்.

எனவே, இவற்றில் ஒரு சில அறிகுறிகள் இருந்தால் கூட உங்கள் கணவரோ அல்லது மனைவியோ மிகச் சிறந்த வாழ்க்கைத் துணை என்பதை புரிந்துகொள்ளுங்கள்... சரி இதெல்லாம் உங்களிடமும் இருக்கிறதா என்பதை சுய பரிசோதனை செய்துகொண்டு, இந்த அறிகுறிகளை வரவழைத்து, உங்கள் லைஃப் பார்ட்னருக்கும் நீங்கள் ஒரு சிறந்த வாழ்க்கைத் துணையாக மாறுங்கள். அதற்கே இப்போதே வாழ்த்துகள்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT