செய்திகள்

பளபளப்பான மேக்-அப் வேண்டுமா? இதை மட்டும் பண்ணுங்க...!

21st Sep 2022 12:51 PM

ADVERTISEMENT

 

மேக் அப் என்பது பெண்களுக்கு மிகவும் விருப்பமான ஒன்று. அழகு சார்ந்த விஷயங்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கும் பெண்கள், சருமம் பளபளப்பாக இருக்க மெனக்கெடுவர் . 

சருமம் பளபளப்பாக இருக்க அடிப்படை விஷயம், குறைந்தது 8 மணி நேரம் ஆழ்ந்த தூக்கம், அடுத்து நிறைய தண்ணீர் குடிப்பது. இந்த இரண்டும் சரியாக செய்யும் பட்சத்தில் உங்கள் சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.

இதன்பின்னர் நீங்கள் அழகாகத் தெரிய, மேக் அப் போடுவது,  உங்கள் அழகு சாதனப் பொருள்களைப் பொருத்தது. 

ADVERTISEMENT

சருமம் பளபளப்பாக இருக்க, மேக் அப்பில் அழகு நிபுணர்கள் பரிந்துரைக்கும் சில டிப்ஸ்: 

மாய்ஸ்சரைசர் 

உடலில் நீர்ச்சத்து குறைந்தால் சருமம் வறண்டு காணப்படும். இதனை சரிசெய்ய மாய்ஸ்சரைசர் அவசியம். குளித்த பின் அல்லது முகம் கழுவிய பின்னர் மாய்ஸ்சரைசர் அப்ளை செய்ய வேண்டும். 

பவுண்டேஷன் 

உங்களுடைய சருமத்தின் நிறத்தை அதிகரிக்கவும், பொலிவாகக் காட்டவும்  இயற்கையான தோற்றத்துடன் இருக்கவும் இது பயன்படுகிறது. சோர்வாக இருந்தாலும் உங்கள் முகத்தை புத்துணர்ச்சியாக்கும். 

இதையும் படிக்க | இந்த 6 அழகுப் பொருள்களை உங்கள் துணையுடன் பகிர்ந்துகொள்ளலாம்!

ஐ ஷேடோ

ஐலைனர் போன்று ஐ ஷேடோவும் சமீபத்தில் பிரபலமாகி வருகிறது. மாடல்களும் பிரபலங்களும் இதை மிகவும் விரும்புகிறார்கள். கண்களின் அழகைக் கூட்டுவதால் இன்று அனைத்துத் தரப்பினரும் பயன்படுத்துகின்றனர்.

ஹைலைட்டிங் செட்டிங் ஸ்ப்ரே

ஹைலைட் செட்டிங் மிஸ்ட் எனும் முகப்பொலிவுக்காக பயன்படுத்தப்படும் ஸ்ப்ரே உங்கள் சருமத்தை மேலும் அழகுபடுத்தும். 

லிப்ஸ்டிக் 

இறுதியாக ஒட்டுமொத்த முகத்துக்கு அழகு சேர்ப்பது லிப்ஸ்டிக். உங்களுடைய சருமம் மற்றும் மேக் அப்பிற்கு ஏற்றவாறு லிப்ஸ்டிக்கை தேர்வு செய்து பயன்படுத்துங்கள். 

தயாரிப்புகள் 

ஒரு பளபளப்பான அழகான தோற்றத்தை உருவாக்குவதில் மிக முக்கியமானது உங்கள் சருமத்திற்கு ஏற்ற தயாரிப்புகளைப் பயன்படுத்துவதாகும். அதாவது, வறண்ட சருமமாக இருந்தால், அடர்த்தியான மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தவும். சென்சிடிவ் சருமமாக இருந்தால் - ஜெல் அல்லது சீரம் அடிப்படையிலான மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தவும். மாய்ஸ்சரைசர் பயன்படுத்தி 5 நிமிடங்களுக்குப் பிறகுதான் மேக் அப் போட வேண்டும்.

அடுத்து, கன்னத்தின் எலும்புகள், மூக்கின் நுனி, கன்னம் மற்றும் உங்கள் புருவங்களுக்கு மேல் ஹைலைட்டரைப் பயன்படுத்தலாம். கருமையாக உள்ள பகுதிகளில் கூடுதலாக ஹைலைட்டரைப் பயன்படுத்தி சரிசெய்யலாம். 

உங்களுடைய சருமத்திற்கு ஏற்றவாறு குறைந்த அல்லது அதிகமான மேக் அப் போடலாம். 

இதையும் படிக்க | குறைந்த ரத்த அழுத்தமா? எப்படி சரிசெய்யலாம்?

ADVERTISEMENT
ADVERTISEMENT