செய்திகள்

ஏபிசி ஜூஸ் தெரியும்! அதென்ன 'க்ரீன் ஜூஸ்'?

5th Oct 2022 06:07 PM

ADVERTISEMENT

நவீன உலகத்தில் தொழில்நுட்ப மாற்றத்திற்கேற்ப உணவு முறைகளும் மாறி வருகின்றன. எடுத்துக்கொள்ளும் உணவுகள், சாப்பிடும் முறை என உணவுப் பழக்கவழக்கங்கள் பெருமளவில் மாறிக்கொண்டு இருக்கின்றன. 

அந்தவகையில் இன்று பழங்களை நேரடியாக சாப்பிடுவதற்குப் பதிலாக பெரும்பாலானோர் ஜூஸைத் தான் விரும்புகிறார்கள். அதிலும் ஏபிசி ஜூஸ் போன்ற கலவையான ஜூஸ். ஏபிசி(ABC) என்பது ஆப்பிள், பீட்ரூட் மற்றும் கேரட் சேர்ந்தது. 

இதன் தொடர்ச்சியாக தற்போது க்ரீன் ஜூஸ் ட்ரெண்டாகி வருகிறது. க்ரீன் ஆப்பிள், வெள்ளரி என இயற்கையான பச்சைக் காய்கறிகள், கொத்தமல்லி, புதினா என பச்சை நிறங்களில் உள்ள உணவுப் பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. உடலுக்குத் தேவையான அனைத்து வகை சத்துகளையும் உள்ளடக்கிய பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படுவதாலும் பிரபலங்கள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாலும் தற்போது ட்ரெண்டாகி வருகிறது. 

இதையும் படிக்க | தீராத தலைவலியா? இயற்கையாக சரிசெய்ய 5 எளிய வழிகள்!

ADVERTISEMENT

பல காய்கறிகள், பழங்கள் இதில் இருப்பதால் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து இதில் கிடைக்கிறது. இதய நோய் பாதிப்பு குறைவு, உடலில் கொழுப்பைக் கரைப்பது என அந்தந்த உணவின் சத்துகள் சேர்ந்து கிடைக்கின்றன. 

ஆனால், அதே நேரத்தில் அதன் சுவை சிலருக்குப் பிடிக்காமல் போகலாம். சிலருக்கு அழற்சி கூட ஏற்படலாம். அவ்வாறு இருந்தால் தவிர்த்துவிடலாம். ஏனெனில், உடலுக்குத் தேவையான ஒட்டுமொத்த ஊட்டச்சத்தையும் ஒரே நேரத்தில் நாம் அளிக்க வேண்டும் என்று அவசியமில்லை. 

தேவைப்பட்டால் உங்களுக்குப் பிடித்த காய்கறிகள், பழங்களை மட்டும் சேர்த்தோ தனித்தனியாகவோ ஜூஸ் செய்து சாப்பிடலாம். 

இதையும் படிக்க | 'கண்கள் முக்கியம்' - மறந்தும் இதையெல்லாம் செஞ்சுடாதீங்க!

ADVERTISEMENT
ADVERTISEMENT