செய்திகள்

ஏசி, டிவி சுவிட்சை அணைப்பதில்லையா... இந்த செய்தி உங்களுக்குத்தான்!

30th Jun 2022 04:39 PM

ADVERTISEMENT

டி.வி, ஏ.சியை பயன்படுத்திய பிறகு முழுமையாக அணைக்காமல் விட்டு விட்டால், அதாவது சுவிட்சை அணைக்காமல் மின்சார உபகரணத்தை மட்டும் அணைத்தால் ஏசி, டிவி, சார்ஜர் எல்லாம் சத்தமின்றி மின்சாரத்தை சிறிது சிறிதாக மின்சாரம் இழுக்கும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கான செலவு ஆண்டுக்கு ரூ.1000 வரை கூடுதல் மின்கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

மின்னணு பொருட்கள் பலவற்றை ரிமோட் மூலம் இயக்கும் நிலையில், பயன்படுத்திய பிறகு அவற்றின் சுவிட்சை பலரும் அணைப்பதில்லை. இதுதொடர்பாக  ஆய்வு மேற்கொண்டதில், டிவி, ஏசி, சார்ஜர் உள்ளிட்டவைகளை பயன்படுத்திய பிறகு ஸ்விட்சை அணைக்காமல் வைத்திருந்தால் அவை தொடர்ந்து மின்சாரத்தை இழுக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: வெள்ளை தாடி கருப்பாக மாற வேண்டுமா? இதைச் செய்தாலே போதும்!

ADVERTISEMENT

இந்த ஆய்வின் படி,  இப்படி  ஸ்விட்சை அணைக்காமல் வைத்திருந்தால் தேவையில்லாமல் 174 யூனிட் மின்சாரம் வரை அதிகமாக செலவாகும் எனவும், அதற்காக ரூ.1000 வரை மின் கட்டணம் செலுத்த வேண்டிருக்கும் எனவும் ஆய்வு எச்சரித்துள்ளது.

இந்த 174 யூனிட் மின்சாரம் இரண்டு 10 வாட் எல்இடி பல்புகளை ஒரு வருடத்திற்கு தடையின்றி இயக்க முடியும். 5 ஸ்டார் ஏசியை 116 மணி நேரத்திற்கு பயன்படுத்த முடியும்.

இந்த ஆய்வில் டிவி, செட்டாப் பாக்ஸ், ஏசி,சவுண்ட் சிஸ்டம் ஆகிய மின் சாதனங்களை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டுள்ளனர். இந்த ஆய்வில் பதிலளித்த 70%-க்கும் அதிகமானவர்கள் 4 மின் சாதனங்களில் சுவிட்சை அணைப்பதில்லை எனக் குறிப்பிட்டுள்ளனர்.

டிவி, ஏசி, சார்ஜர் உள்ளிட்ட மின்சார உபகரணங்களை பயன்படுத்திய பிறகு சுவிட்சை அணைக்க வேண்டும் என்று இந்த ஆய்வு அறிவுறுத்துகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT