செய்திகள்

செல்லிடப்பேசியால் தூக்கம் தொலைகிறதா? ஒரே வழி

20th Jun 2022 04:48 PM

ADVERTISEMENT


செல்லிடப்பேசிகளால் இந்த தலைமுறையினர் பலவற்றை இழந்திருந்தாலும், மிக முக்கியமானது தூக்கம்தான். இந்த சிக்கலைத் தீர்க்க ஒரு வழி இருக்கிறது.

செல்லிடப்பேசி வந்த பிறகு, பல குடும்பங்களில் சண்டைகளே வருவதில்லை என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? ஆம் பேசினால்தானே சண்டை வரும். வீட்டுக்குள் நான்கு பேர் இருந்தால் நான்கு பேரும் தலா ஒரு செல்லிடைப்பேசியை வைத்துக் கொண்ட அதில் மூழ்கியிருக்கிறார்கள்.

அதில் ஒரு குடும்ப வாட்ஸ்ஆப் குரூப் இருக்கும். அதிலேயே முக்கிய தகவல்களை பரிமாறிக் கொள்கிறார்கள். பிறகு எப்படி தம்பதிகளுக்குள் சண்டை வரும். தற்போதெல்லாம் பலருக்கும் செல்லிடைப்பேசியே வாழ்க்கைத் துணையாகவும் மாறிவிட்டது. 

செல்லிடப்பேசிகளும் கொள்ளைக்காரர்களைப் போலத்தான். பகல் பொழுதுகளைவிடவும் இரவு நேரங்களைத்தான் அதிகம் கொள்ளையடிக்கின்றன. எனவே, தூக்கத்தை தொலைத்து செல்லிடைப்பேசிகளுக்கு அடிடையாகியிருக்கும் எத்தனையோ பேர் அதிலிருந்து விடுபட வழி தெரியாமல் தவித்து வருகிறார்கள்.

ADVERTISEMENT

சிலர் நள்ளிரவு வரை செல்லிடப்பேசியைப் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். அதிலிருந்து விடுபடும் வழி தெரியாமல். சிலர் நல்ல ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது கூட நள்ளிரவில் எழுந்து செல்லிடைப்பேசியை எடுத்து அதில் தங்களுக்கு தகவல் ஏதேனும் வந்திருக்கிறதா என்று ஆராய்கிறார்கள். அது மட்டுமல்ல அப்படி வந்திருந்தால் எத்தனை மணி என்று கூட பாராமல் அதற்கு பதிலும் அளிக்கிறார்கள்.

செல்லிடப்பேசி காலத்தில் இப்படி தனது தகவலுக்கு இத்தனை மணிக்கு ஒருவர் பதிலளித்திருக்கிறாரே என்று யாரும் கவலைப்படுவதெல்லாம் கிடையாது. ஏனெனில் இது எங்கும் நிறைந்த நோயாகவே மாறிவிட்டது.

இதிலிருந்து விடுபட ஒரே ஒரு எளிய(??) வழி இருக்கிறது. இரவு உறங்கும் முன்பு, உங்கள் செல்லிடப்பேசியை நீங்கள் உறங்கும் அறையிலிருந்து வேறொரு அறையில் வைத்துவிட்டு படுக்கைக்குச் செல்லுங்கள்.  நிச்சயம் இது ஆரம்பத்தில் கசக்கத்தான் செய்யும். ஆனால், இதனால் கிடைக்கும் நன்மைகளை நீங்கள் மெல்ல உணரும் போது அதனை எளிதாகவே மாற்றிவிடலாம்.

முதல் இரண்டு மூன்று நாள்களுக்கு உறக்கம் வராமல், சொறி, சிரங்குப் பிடித்த குரங்கு போல நமது கைகள் என்ன செய்வதென்று தெரியாமல் அலைபாயும். ஆனால், போகப் போக உங்கள் மனம் அதனால் அடையும் ஆனந்தத்தை மூளைக்குச் சொல்லி சமாதானம் செய்யும். பிறகு நீங்கள் அடைவதை உங்கள் குடும்பத்தினரும் பின்பற்றலாம்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT