செய்திகள்

குழந்தைகளை அதிகம் பாதிக்கிறதா காற்று மாசு?

DIN

காற்று மாசினால் பெரியவர்களைவிட குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படுவதாக புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது. 

சுற்றுச்சூழலில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது காற்று மாசு. நவீனம், தொழில்நுட்ப பெருக்கம், வாகனப் பயன்பாடு உள்ளிட்ட காரணங்களினால் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்துக் காணப்படுகிறது. குறிப்பாக மக்கள் தொகை அதிகமுள்ள தில்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது. 

இந்நிலையில் காற்று மாசு குறித்து அமெரிக்க ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஓர் ஆய்வின் முடிவுகள் 'நியூ டிரெக்ஷன்ஸ் ஆப் சைல்டு அண்ட் அடல்சண்ட் ரிசர்ச்'(New Directions for Child and Adolescent Research) என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளன. 

சாக்ரமெண்டோ பகுதியில் 9-11 வயதுடைய 100க்கும் மேற்பட்ட ஆரோக்கியமான குழந்தைகளின் ரத்த மாதிரிகளை ஆய்வு செய்தனர். அவர்களின் வீடுகளுக்கு அருகில் உள்ள சுற்றுச்சூழல், காற்று மாசு குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. 

இதில், காற்று மாசு அதிகமுள்ள இடங்களில் வாழும் குழந்தைகளின் உடல்நலனில் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. 

'குழந்தைகள் அதிக காற்று மாசு சூழ்நிலையில் இருந்தால், இதயத் துடிப்பில் மாற்றம் ஏற்படுகிறது. இன்டர்லூகின் அளவு மாறுவதையும் ரத்த மாதிரிகள் காட்டுகின்றன.

காட்டுத்தீயின் போது வெளியிடப்படும் மாசுபாடுகளின் வெளிப்பாடு குழந்தைகளின் பல எதிர்மறையான உடல்நல விளைவுகளுடன் தொடர்புடையது என்றும் பெரியவர்களை விட சிறியவர்களின் அதாவது குழந்தைகளின் உறுப்பு அமைப்புகளுக்கு காற்று மாசு உடனடியாக விளைவாற்றுகின்றன. 

இதயத்தில் பிரச்னைகள், ஆஸ்துமா, நுரையீரல் செயல்பாடு குறைதல், கவனக்குறைவு, ஹைபராக்டிவிட்டி போன்ற நரம்பியல் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது' என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனவே, குழந்தைகள் காற்று மாசு அதிகமுள்ள இடங்களில் இருப்பதை தவிர்க்கலாம், முடிந்தால் முகக்கவசம் உள்ளிட்டவற்றை அணிந்துகொள்ளலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

2-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 11 மணி நிலவரம்

பயமோ, வருத்தமோ இல்லாமல் கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது: விஷாலின் அதிரடி பதிவு!

மக்களவை 2-ம் கட்ட தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: பாஜக நிர்வாகி பலி

SCROLL FOR NEXT