செய்திகள்

சன்ஸ்கிரீன் பாதுகாப்பானது அல்ல!

DIN

தற்போது சந்தையில் இருக்கும் சன்ஸ்கிரீன்கால் சருமத்தை சூரியக்கதிர்களில் இருந்து பாதுகாக்காது என்று புதிய ஆய்வொன்று கூறுகிறது. 

பருவநிலை மாற்றங்கள் குறிப்பாக கோடைக் காலங்களில் சருமத்தில் ஏற்படும் பிரச்னைகளைத் தவிர்க்க பெண்கள் சன்ஸ்கிரீன் க்ரீம்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். 

சூரிய ஒளியிடமிருந்து வெளிப்படும் புறஊதாக் கதிர்களால் சருமப் பிரச்னைகளும் அதிகபட்சமாக தோல் புற்றுநோயும் ஏற்படுகின்றன. இதனால் சன்ஸ்கிரீன் க்ரீம்களைப் பயன்படுத்த தோல் மருத்துவர்களே பரிந்துரைக்கின்றனர். 

இந்நிலையில் ஒரு புதிய ஆய்வின்படி, சன்ஸ்கிரீன் சூரியக் கதிர்களில் இருந்து சருமத்தை முழுவதுமாக பாதுகாக்காது என்றும் தற்போது சந்தையில் பயன்படுத்தப்படும் சன்ஸ்கிரீன் க்ரீம்களில் ஒரு முக்கிய ஆன்டி-ஆக்சிடன்ட் மூலப்பொருள் இல்லை என்றும் தெரிய வந்துள்ளது. 

இந்த கிரீம்கள் அனைத்திலும் இல்லாத ஒரு முக்கிய மூலப்பொருள் தான் சருமத்தைப் பாதுகாக்கும் என்று கூறும் இந்த ஆய்வின் முடிவுகள் 'ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ்'(Antioxidants) என்ற இதழில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளன.

க்ரீம்களில் இல்லாமல் போன மூலப்பொருள், இயற்கையில் பொதுவாகக் காணப்படும் ஒரு வகை நிலையான மூலக்கூறு(ஆன்டிஆக்ஸிடன்ட்) என்று இந்த ஆய்வு கூறுகிறது. இந்த ஆக்ஸிஜனேற்ற மூலக்கூறுகள் உயிரணுக்களில் உள்ள அதிகப்படியான இரும்பை நீக்குகிறது. அதாவது உடல் செல்களில் அதிகப்படியான இரும்பினை நீக்கும் ஒரு மூலக்கூறைத்தான் சன்ஸ்கிரீனில் சேர்க்க வேண்டும் என்று கூறுகிறது இந்த ஆய்வு. 

பாத் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தோலின் ஆரோக்கியம் உயிரணுக்களில் உள்ள இரும்பின் அளவைக் கொண்டு நிர்ணயிக்கப்படுவதாகவும் அதன் அளவு அதிகரிக்கும் பட்சத்தில் வயதான தோற்றம் ஏற்படுவதாகவும் கூறுகிறது. 

இன்று சந்தையில் இருக்கும் சன்ஸ்கிரீன்கள் புறஊதாக் கதிர்களைத் தடுக்கும் அல்லது உறிஞ்சும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அவ்வாறு செய்வதன் மூலம், அவை தோலில் உருவாக்கப்படும் ஃப்ரீ ரேடிக்கல்களின் எண்ணிக்கையைக் குறைக்கின்றன. ஆனால், இந்த நிலையற்ற மூலக்கூறுகள்தான் தோல் சேதம் மற்றும் வயதை ஏற்படுத்துகின்றன. ஃப்ரீ ரேடிக்கல்கள், டிஎன்ஏ மற்றும் பிற உயிரணுக் கூறுகளை சேதப்படுத்துவதன் மூலம் தீங்கு ஏற்படுகிறது. 

ஏனெனில் இப்போதைய சன்ஸ்கிரீன்களில் இரும்பின் அளவு குறித்து கவனத்தில் கொள்ளப்படாததே இதற்குக் காரணம். சில கலவைகளின் அளவை மாற்றியமைப்பதன் மூலமாக இந்தப் பிரச்னையை சரிசெய்ய முடியும். 

உடலுக்கு இரும்புச் சத்து தேவை என்றாலும், அதிகப்படியான அல்லது குறைவான இரும்புச் சத்து பாதிப்பை ஏற்ப்படுத்தும். சூரிய ஒளியில் இருக்கும்போது இதன் அளவு மாறுபடுவதால் தோல் பிரச்னை ஏற்படுகிறது. எனவே, அவற்றை சரிசெய்யும் நோக்கில் சன்ஸ்கிரீன்களின் பயன்படுத்தப்படும் கலவைகளின் அளவினை மாற்ற வேண்டும் என்று கூறுகின்றனர் இந்த ஆய்வாளர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT