செய்திகள்

'நட்ஸ்' வகைகளை இப்படியும் சாப்பிடலாம்!

19th Jan 2021 02:14 PM

ADVERTISEMENT

உலக அளவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நீரிழிவு நோயால் இதய நோய்கள், சிறுநீரகப் பிரச்னைகள் என பல உடல்நலப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது.

கடந்த 10 ஆண்டுகளில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது என்றும் தற்போதைய நிலவரப்படி உலகில் 42 கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தரவுகள் தெரிவிக்கின்றன.  ஆனால், 2025க்குள் நீரிழிவு மற்றும் உடல் பருமன் அதிகரிப்பதை நிறுத்துவதற்கு உலக நாடுகள் ஒன்று கூடி இலக்கு நிர்ணயித்துள்ளன. இதற்கு நாம் ஒவ்வொருவரும் உணவில் கவனம் செலுத்துவது அவசியமானது. 

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை இயல்பாக வைத்திருக்க வேண்டும். மேலும் இதற்கு மருந்துகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை என்றும் கூறப்படுகிறது. ஒட்டுமொத்த ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிப்பது மிக முக்கியமானது.

அவ்வாறு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிப்பதில் உணவு முக்கியப் பங்கு வகிக்கிறது. பல்வேறு வகையான பழங்கள், காய்கறிகள், தானியங்கள், பருப்பு வகைகள், நல்ல கொழுப்புகளின் மூலங்கள், நார்ச்சத்து மற்றும் புரதங்கள் அடங்கிய உணவுகளை பல வழிகளில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர் சுகாதார வல்லுநர்கள். 

ADVERTISEMENT

இந்நிலையில் நீரிழிவு நோயாளிகள் நட்ஸ் எனும் பருப்பு வகைகளை அப்படியே உணவில் சேர்த்துக்கொள்வதற்கு பதிலாக கீழ்குறிப்பிட்ட வழிகளில் பயன்படுத்தலாம். இதனால் நட்ஸ் சாப்பிடுவதன் பலன் கிடைப்பதோடு தேவையற்ற மற்ற பொருள்களை உணவில் சேர்த்துக்கொள்வது தவிர்க்கப்படுகிறது. பொதுவாக நட்ஸ் பருப்புகளை நேரடியாக எடுத்துக்கொள்ள விரும்பாத அனைவரும் இந்த முறைகளில் எடுத்துக்கொள்ளலாம். 

► அன்றாட உணவுடன் பாதாம் மற்றும் அக்ரூட் பருப்புகளைக் கொண்டு சட்னி செய்து உணவில் சேர்த்துக்கொள்ளலாம். 

► தினமும் அருந்தும் தேநீரில் பருப்புகளை தூள் செய்து பயன்படுத்தலாம். உதாரணமாக பாதாம் பவுடரை தேநீரில் சேர்த்து பருகலாம். 

► பாதாம் அல்லது அக்ரூட் பருப்புகள் அல்லது உங்களுக்கு வேண்டிய பருப்புகள் அனைத்தையும் ஒன்றாக மிக்சியில் போட்டு அரைத்து அவற்றில் தண்ணீர் அல்லது பால் சேர்த்து பழச்சாறு வடிவில் அருந்தலாம். 

► உங்களுக்கு எந்தவகையான உணவு பிடிக்குமோ அதில் பருப்புகளாகவோ அல்லது அவற்றை பொடி செய்து பயன்படுத்தலாம். உதாரணமாக தோசையில் நட்ஸ் அனைத்தையும் பொடி செய்து தோசை மாவில் கலந்து பயன்படுத்தலாம். 

► ரத்த சர்க்கரை அளவை சரிசெய்ய இனிப்புகளை எடுத்துக்கொள்ள முடியாத நிலையில் முழுக்க நட்ஸ்களை மட்டும் கொண்டு செய்த இனிப்புகளை சாப்பிடலாம். இதனால் சர்க்கரை அளவும் அதிகரிக்காது. உடல் ஆரோக்கியம் பெறும். 

 

Tags : lifestyle
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT