செய்திகள்

சருமத்தில் கரும்புள்ளிகளை நீக்கும் எளிய முறை

20th Nov 2020 05:06 PM

ADVERTISEMENT

பெண்கள் சரும அழகுக்கு மெனக்கெடுவது இயல்புதான். ஆனால், முகத்தில் சிலருக்கு லேசாகத் தெரியும் கருப்பு/பழுப்பு நிற புள்ளிகள் முக அழகை கெடுப்பதோடு, மிகவும் சோர்வாக இருப்பது போலக் காட்டும். 

இதற்காக அழகு நிலையங்களுக்குச் சென்று ரசாயனக் கலவைகளை பயன்படுத்துவதைத் தவிர்த்து வீட்டில் உள்ள பொருள்களைக் கொண்டே பிரச்னைக்குத் தீர்வு காணுங்கள். 

கடலை மாவு, சந்தனப் பொடி தலா இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்துக்கொண்டு அதில் சிறிதளவு மஞ்சள் தூளும், இரண்டு டேபிள் ஸ்பூன் பாலும் சேர்த்து நன்றாகக் கலக்கி அந்த கலவையை முகத்தில் தடவவும். 

பின்னர் 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி சுத்தமான துணியால் முகத்தை லேசாக துடைக்கவும். இதனை தினமும் செய்துவர நாளடைவில் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கி முகம் பொலிவு பெறும். 

ADVERTISEMENT

இந்த கலவையில் சிறிதளவு பாசிப்பயறு மாவும் சேர்த்துக்கொள்ளலாம் அல்லது கடலை மாவுக்கு பதிலாக பாசிப்பயறு மாவும் பயன்படுத்தலாம். 

Tags : beauty tips lifestyle
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT