செய்திகள்

உடல் செயல்பாட்டை அதிகரிக்க உதவும் ஃபிட்னெஸ் செயலிகள்!

DIN

ஃபிட்னெஸ் மொபைல் செயலிகள் மற்றும் மணிக்கட்டில் அணியக்கூடிய ட்ராக்கர்கள் உடல் செயல்பாட்டு அளவை அதிகரிக்க உதவுகின்றன என்பது ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் ஸ்போர்ட்ஸ் மெடிசினில் என்ற ஆன்லைன் இதழில் இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 

உடலை ஆரோக்கியமாக கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்கு ஆண், பெண் இருபாலரும் மெனக்கெட்டு வருகின்றனர். அந்தவகையில் தற்போது ஃபிட்னெஸ் மொபைல் செயலிகள் பல உருவெடுத்து வருகின்றன. எந்தெந்த நேரத்திற்கு என்னென்ன உணவுகள் எடுத்துக்கொள்ள வேண்டும், உடல் எடைக்கு ஏற்ப என்ன மாதிரியான உடற்பயிற்சிகளை செய்யவேண்டும் என கூறுகின்றன. 

அதேபோல உடலில் பொருத்தப்படும் ட்ராக்கர்கள், நடைபயணம் மேற்கொண்ட தூரம், உடற்பயிற்சி செய்யும்போது எவ்வளவு கலோரிகள் எரிக்கப்படுகிறது, இதயத்துடிப்பு அளவு உள்ளிட்ட விவரங்களை அளிக்கிறது. 

இவ்வாறான ஃபிட்னெஸ் மொபைல் செயலிகள் மற்றும் ட்ராக்கர்கள் உடல் செயல்பாடுகளை அதிகரிக்க உதவுகின்றன என்றும் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க இளைஞர்களை ஊக்குவிக்கின்றன என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவை உடல் செயல்பாடுகளை அதிகரிப்பதற்கான மிகச் சிறந்த உத்திகள் என்றும் ஸ்மார்ட்போன் பரவலாக அனைவரது கையிலும் இருப்பதால் உடல் ஆரோக்கியம் குறித்த தகவல்களை அனைவரும் எளிதில் பெறுகின்றனர். 

அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் பெரியவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் ஃபிட்னெஸ் செயலிகளை பயன்படுத்துகின்றனர். 2007 முதல் 2020 வரை வெளியிடப்பட்ட பல்வேறு ஆய்வுகளை ஆய்வு செய்ததில் இந்த முடிவுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. 

பிட்னெஸ் செயலிகளை பயன்படுத்துவதால்தான் பலர் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துகின்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் அவர்கள் உடற்பயிற்சி செய்வது அதிகரித்து வருகிறது. இது மக்களின் சுகாதாரம் உடல் ஆரோக்கியம் சார்ந்து முக்கியத்துவம் பெறுகிறது என்று ஆய்வு கூறுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேபி புடலங்காய் விலை உயா்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

டாடா நிறுவனத்துடன் சங்கரா பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்தம்

தொழிலாளி மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மகமாயிஅம்மன் கோயில் வருடாபிஷேக விழா

கூட்டுறவு மேலாண்மை பயிற்சிக்கு வரும் 29-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT