செய்திகள்

பிலிப்பைன்ஸ் அகழ்வாராய்ச்சியில் 50,000 ஆண்டுகளுக்கு முந்தைய புதிய மனித குலப் படிமங்கள்!

11th Apr 2019 06:12 PM | RKV

ADVERTISEMENT

 

பிலிப்பைன்ஸ் குகையொன்றில் பண்டைய மனித குடும்பத்தின் புதிய கிளையொன்று கண்டுபிடிக்கப் பட்டதாக தகவல். அவை கிடைத்த இடமான லஸோன் தீவை அடிப்படையாகக் கொண்டு இந்தப் புதிய கண்டுபிடிப்புக்கு ஹோமோ லஸோனென்சிஸ் என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இவர்கள் இன்றைய இன்றைய மனித குலத்தின் நேரடி மூதாதையர்களாக இருக்க வாய்ப்பில்லை எனினும் தூரத்துச் சொந்தங்களாக இருக்க 99% வாய்ப்பிருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இவர்கள் வாழ்ந்திருந்த காலம் இன்றைக்கு 50,000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம். அன்று இந்த மனிதர்களின் உயரம் வெறும் 3 அடிகளே என புதன் அன்று வெளியிடப்பட்ட அறிகையொன்றில் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கண்டுபிடிப்பானது மனித பரிணாம வளர்ச்சி குறித்த அறிவியல் கண்டுபிடிப்புக் கதைக்கு மேலும் சர்ச்சையைக் கூட்டியுள்ளது. குரங்கில் இருந்து மனிதன் பிறந்தான் எனும் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை சிதைப்பதாக இருக்கிறது இந்தப் புதிய கண்டுபிடிப்பு. ஏனெனில் மனித குலம் தோன்றிய காலங்களில் இருந்து பல விசித்திரமான வடிவங்களில் எல்லாம் எண்ணற்ற மனித குலங்கள் வாழ்ந்து மடிந்திருக்கக் கூடும் எனும் ஐயப்பாட்டுக்கு இந்தக் கண்டுபிடிப்பு வழிவகுத்திருக்கிறது.

ADVERTISEMENT

நமது மூதாதையர்களாகக் கருதப்படும் ஹோமோசேபியன்கள் இப்போது ஒப்பீட்டளவில் தனியாக இந்த உலகில் வாழ்கின்றனர்.

தற்போது கிடைத்து வரும் புதிய மனித இனங்களைக் காண்கையில் மனிதனின் பரிணாம வளர்ச்சியில் நாம் எதிர்பார்த்த மாற்றங்களைக் காட்டிலும் மேலும் அதிகமான மாறுதல்களைத் தருவனவாக உள்ளன என்கிறார் கனடா, லேக்ஹெட் பல்கலைக்கழகத்தின் மானுடவியல் துறை வல்லுனரான மேத்யூ டோச்செரி. இவர் மேற்கண்ட அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டவர் இல்லையென்ற போதும் ஒரு மானுடவியலாளர் எனும் அடிப்படையில் மேற்கண்ட கருத்தைப் பகிர்ந்திருக்கிறார்.

2000 ல் பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அர்மண்ட் சால்வடர் மிஜரிஸ் எனும் மாணவர் லஸோன் தீவிலிருக்கும் கல்லாவோ குகைப்பகுதிகளை பிலிப்பைன்ஸில் முதலில் விவசாயம் செய்த மனித இனம் எது எனும் ஆராய்ச்சிக்காக தோண்ட முற்படுகையில் கிடைத்த சான்றுகளைன் அடிப்படையில் அவர் மேலும் ஆழமாக அந்தப் பகுதி நிலத்தைத் தோண்டுவது என முடிவெடுத்தார்.

இந்தோனேசியத் தீவுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகளின் ஆய்வுகளின் வாயிலாக கண்டறியப்பட்ட 60,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பிரம்மாண்டமான மனித உயிரினங்களுக்கு அன்றைய விஞ்ஞானிகள் ஹோமோ ஃப்ளோரெசியன்சிஸ் என்று பெயர் சூட்டியிருந்தனர்.  அவை சில அம்சங்களில் இன்றைய மனிதர்களின் இயல்புகளுடன் ஒத்துப் போவதாயிருந்தன. அத்துடன் அவர்கள் தாங்கள் வாழ்ந்த காலத்தில் கற்கருவிகளை கையாளத் தெரிந்தவர்களாகவும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயினும் இவ்வகை மனித உயிரினங்களில் வயது வந்தவை அனைத்தும் சுமார் 3 அடி மட்டுமே வளர்ச்சி கொண்டவையாகவும் மிகச்சிறிய மூளை கொண்டவையாகவும் இருந்தவை சந்தேகத்திற்கிடமானவையாக இருந்தன. அதன் காரணமாகவே இவர்களின் நிஜமான மூதாதையர்கள் யார் எனும் ஆராய்ச்சி இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒருவேளை இவர்களின் மூதாதையர்கள் ஆப்ரிக்காவைச் சேர்ந்த ஹோமினைன்களாக இருக்கலாம். அவர்கள் தான் உயரம் குறைந்தவர்களாகவும் சிறிய மூளை கொண்டவர்களாகவும் இருந்தனர்.

ஆனால் தற்போது பிலிப்பைன்ஸ் அகழ்வாராய்ச்சியில் கிடைத்திருக்கும் படிமங்களில் பற்களும், கால் சிற்றெலும்புகளும் கிட்டத்தட்ட இன்றைய மனித குலத்தை ஒத்தவையாகவே இருக்கின்றன. அளவு தான் இடிக்கிறது. உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட எந்த ஒரு மனித குலத்தையும் விட இவை மிகச்சிறியவையாக இருக்கின்றன.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT