தற்போதைய செய்திகள்

தேனி: 18ஆம் கால்வாய் பாலம் உடைந்து தண்ணீர் வீண்: விவசாயிகள் கவலை

5th Nov 2021 05:45 PM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் க.புதுப்பட்டி அருகே 18 ஆம் கால்வாய் பாலம் உடைந்து தண்ணீர் வீணாகியதால் விவசாயிகள் கவலையடைந்தனர்.

கடந்த அக் .16 ல் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து 18ம் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கூடலூர், கம்பம், கோப்பை, தேவாரம் வழி சுத்தகங்கை ஓடை வரை கொண்டு செல்லப்படுகிறது. இதன்மூலம் உத்தமபாளையம் மற்றும் போடி தாலுகாவிலுள்ள 44 கண்மாய்களில் நிரம்பி, நிலத்தடிநீர் பெருகுவதோடு, நேரடியாக 4 ஆயிரத்து 614.25 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.

இதையும் படிக்க | கேரள போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

இந்நிலையில் வியாழக்கிழமை க.புதுப்பட்டிக்கு மேற்கு திசையில் 18ஆம் கால்வாயில்அமைக்கப்பட்டிருந்த பாலம் உடைந்தது. இதனால் கோசந்திர ஓடையில் அளவிற்கு அதிகமாக தண்ணீர் சென்றதால் ஊத்துக்காடு - க.புதுப்பட்டி சாலை சேதமமைடந்தது.

ADVERTISEMENT

இதேபோல் தேனி கம்பம் நெடுஞ்சாலையில் உள்ள கோசந்திர ஓடை பாலம் மண் அரிப்பால் சேதமடைந்தது. நெடுஞ்சாலைத் துறையினர் மற்றும் பொதுப் பணித் துறையினர் சேதமடைந்த சாலை மற்றும் பாலம் பகுதிகளில் தற்காலிக பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : தேனி
ADVERTISEMENT
ADVERTISEMENT